October 13, 2016
விமான பணிப்பெண்ணை 5 ஸ்டார் ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு வலைவீச்சு
விமானப் பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அரசு அதிகாரி மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் விமானப் பணிப் பெண்ணாகப் பணியாற்றி வருகிறார். இவரை காப்புரிமை பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர் சம்பவத்தன்று
சில வேலைவாய்ப்புப் படிவங்களை பூர்த்தி செய்வதற்காக தென்மேற்கு தில்லி, துவாரகாவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வருமாறு அழைத்தாராம்.
இதையடுத்து, அந்த ஹோட்டலுக்கு சென்ற அப்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து தகாத முறையில் தொட்டு பாலியல் இச்சைக்கு இணங்குமாறு அந்த அதிகாரி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே, பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்தார். இதையடுத்து, அப்பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விமான பணிப்பெண்ணை 5 ஸ்டார் ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு வலைவீச்சு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.