Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 16, 2016

58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்



ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கமாண்டர்கள் உட்பட 58 பேரை தண்ணீரின் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர்.
சிரியா, இராக் நாடுகளின் ஒரு பகுதியை ஒருங்கிணைத்து “இஸ்லாமிய அரசு” எனும் புதிய நாட்டை ஐ.எஸ். பயங்கரவாதிகள் உருவாக்கி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். தனிநாட்டை உருவாக்குகிறோம் என்ற பெயரில் பல கொடூர சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
அப்பாவி பிணைக் கைதிகளின் கழுத்தை அறுத்து அந்த வீடியோவை பதிவேற்றி மிரட்டுவது, தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, மனித வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்வது, பிரபல நிறுவனங்களின் இணையப் பக்கங்களை முடக்குவது என ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் உலகத்தை அச்சுறுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஈராக்கின் பெரும் பகுதியை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு மொசூல் நகரை கைப்பற்றினர். ஆனால், அமெரிக்கா மற்றும் குர்து படையினரின் ஆதரவுடன் ஈராக் இராணுவம் மெகசூல் நகரில் தாக்குதல் நடத்தி அந்நகரை மீண்டும் கைப்பற்றியது.
இதன் காரணமாக, ஐ.எஸ்.ஐ.எஸ். அமப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி ஈராக இராணுவத்திற்கு உதவிய கமாண்டர்கள் உட்பட 58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ய உத்தரவிட்டார். இதனால் ஐ.எஸ்.தீவிரவாதிகள் 58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து அவர்களை ஒரே இடத்தில் புதைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.