Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

அம்மையார்குப்பத்தில் 4 சிறுமிகள் உள்பட 5 பேர் கடத்தல் தப்பி வந்த சிறுமியால் மற்றவர்கள் மீட்பு


அம்மையார்குப்பம் கிராமத்தில் ஐஸ் வாங்கித் தருவதாக 4 சிறுமிகள் உள்பட 5 பேர் கடத்தப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுமி தப்பி வந்து கொடுத்த தகவலின் பேரில் மற்றவர்கள் மீட்கப்பட்டனர்.

கடத்தல்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அம்மையார்குப்பம் இந்திரா நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சக்தி (வயது 9), புன்னகை (7), பிரியா (4), மோகன் (7), தேவி (5). இவர்கள் நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கு வந்து அவர்களுக்கு ஐஸ் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதை உண்மை என்று நம்பிய சிறுமிகள் மற்றும் சிறுவன் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

சற்று தூரம் சென்றதும் சிறுமி சக்தி அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். நடந்த விவரத்தை தனது தந்தை வரதராஜனிடம் இதுபற்றி தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வரதராஜன் கடத்தப்பட்ட சிறுமி புன்னகையின் தந்தை ரவியை அழைத்துக்கொண்டு ஆளுக்கொரு புறமாக தேடினர்.

பரபரப்பு
அம்மையார்குப்பத்தை அடுத்த கொங்காமுடி மலை அருகே ரவி தேடிச் சென்றபோது சிறுமிகள் மற்றும் சிறுவனுடன் மர்மநபர் சென்று கொண்டிருந்தார். ரவியை பார்த்ததும் மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.

ரவி கடத்தப்பட்ட 4 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். இந்த தகவல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.