Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

​கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு 4 வாரங்களுக்குள் இழப்பீடு!



கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகையை வட்டியுடன் கணக்கிட்டு 4 வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு 2 ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் குழு பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு இழப்பீட்டு தொகையை சம்பவம் நடைபெற்ற 2004ம் ஆண்டு முதல் 2011 வரை 8 சதவீத வட்டியும், 2011 முதல் 2012 வரை 8.6 சதவீத வட்டியும் அதேபோல் 2012-16 வரை 8.7% வட்டியும் கணக்கிட்டு 4 வார காலத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், காயமடைந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு 50 ஆயிரம் முதல் 6 லட்சம் வரை இழப்பீடு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.