October 12, 2016
பாபநாசம் தலையணை பகுதியில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களும் மீட்பு!
நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணை பகுதியில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
சென்னையை சேர்ந்த நக்கீரன், ஸ்ரீனிவாசன், புதுச்சேரியை சேர்ந்த வசந்த் மற்றும் சதீஷ் ஆகியோர், விடுமுறையைக் கொண்டாடுவதற்காக பாபநாசம் வந்தனர். இந்நிலையில், அவர்கள் பாபநாசம் தலையணை பகுதியில் இறங்கி குளித்துள்ளனர்.
ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள், கரை திரும்ப முடியாமல், அணையில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்துவந்த வந்த வி.கே.புரம் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நேற்று இரவு ஒருவரின் உடலை மீட்டனர்.
மற்ற 3 பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உடல்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, உடற்கூறு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
பாபநாசம் தலையணை பகுதியில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடல்களும் மீட்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 12, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.