October 19, 2016
புதுச்சேரியில் தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!
புதுச்சேரியில் தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போரூரைச் சேர்ந்த முத்துராமலிங்கம், அவரது மனைவி துளசி, மகன் பாலமுருகன் ஆகிய 3 பேரும், நேற்று முன்தினம் புதுச்சேரி சென்றுள்ளனர். அங்கு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
நேற்றிரவு வரை அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், அறைக் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, 3 பேரும் சடலமாக கிடந்துள்ளனர்.
அறையில் மருந்து பாட்டில் கிடந்ததால், அவர்கள் விஷம் குடித்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட 3 பேரும், தங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு, இறந்துள்ளனர்.
அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார், 3 பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரியில் தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.