Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 23, 2016

மக்கள் நலக் கூட்டணி 3 தொகுதி தேர்தலை புறக்கணிக்க முடிவு: வைகோ அறிவிப்பு


 
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடந்தது.
அப்போது, 3 தொகுதிகளில் நடக்கும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மதிமுக மாவட்டச் செயலாலர்கள் வலியுறுத்தினர்.
கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் வைகோ கூறும்போது, "தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை செய்தோம். நியாயமாக நடக்காது என்பதால் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம். அதிமுக, திமுக சார்பில் ஏற்கெனவே நிறுத்தப்பட்ட வேட்பாளர்களே மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, அங்கு மீண்டும் பணப் பட்டுவாடா நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்தத் தேர்தலை ம.ந.கூட்டணி புறக்கணிக்கிறது" என்றார்.
தேர்தல் புறக்கணிப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, "தஞ்சை, அரவக்குறிச்சியில் அதிக அளவில் பணப் பட்டுவாடா நடந்ததாக கூறித்தான் அங்கு தேர்தலை ஆணையம் ரத்து செய்தது.
இந்நிலையில், தற்போது திமுகவும் அதிமுகவும் அதே வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. இந்தச் சூழலில் தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பில்லை என்பதால் புறக்கணிக்கிறோம்" என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறும்போது, "தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் என்ன முறைகேடு நடந்தது, அதை யார் செய்தது என்பதை தேர்தல் ஆணையம் கூறவில்லை. தவறுகளை சரிசெய்யாமல் தேர்தலை நடத்தினால் மீண்டும் அதே முறைகேடுகள்தான் நடக்கும். எனவே, தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.