Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 19, 2016

முதல்வர் குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு 3 நாள் நோன்பு



முதல்வர் குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுகவினர் 3 நாட்கள் நோன்பு மேற்கொண்டுள்ளனர்.

அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 25 பேர் இன்று முதல் 3 நாட்கள் நோன்பு இருந்து வருகின்றனர். மேலும், அப்போலோ மருத்துவமனை முன்பு 20 பள்ளி மாணவர்கள் முதல்வர் குணமடைய வேண்டி திருக்குரான் ஓதி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

முதல்வர் குணமடைய வேண்டி அதிமுக மகளிரணி சார்பில் அப்போலோ மருத்துவமனை முன் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல முதல்வர் குணமடையவேண்டி திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் 20க்கும் மேற்பட்டோர்  அப்பல்லோ மருத்துவமனை முன்பு தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.