October 13, 2016
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 3 பேர் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வடமாநில சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், 2 இளைஞர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் அரசனட்டி பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தின் 11 வயது சிறுமி ஒருவர், தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று தசரா பண்டிகையை முன்னிட்டு அருகிலுள்ள கோவிலில் சிறப்புப் பூஜை நடந்தது.
இதில் பங்கேற்க சென்ற சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் மணிக்குமார் ஆகிய இருவரும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு இளைஞர் சரத்குமாரின் தாய் பிரியாயும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து, சரத்குமார், மணிக்குமார் மற்றும் பிரியா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 3 பேர் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.