October 5, 2016
38 வழக்குகள் உள்ள பிஜேபி முருகானந்தத்தையே இந்திய சட்டத்தால் தண்டிக்க முடியவில்லை - தமிழச்சியின் கிண்டல்
38 வழக்குகள் உள்ள கருப்பு முருகானந்தத்தையே இந்திய சட்டத்தால் தண்டிக்க முடியவில்லை -இதில் என்மீது வழக்கு தொடுத்து என்ன செய்யப்போகிறார்கள் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார் இன்னும் கருப்பு அவர்களின் வழக்கு விபரங்களையும் பதிவிட்டு பரப்பை ஏற்படுத்திஉள்ளார்..
“தமிழச்சி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு 153 கலவரம் தூண்டுதல், 505/1 வெறுப்பை தூண்டுதல், 505/2 வதந்தி பரப்புதல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துரை ஆணையர் எச்சரித்துள்ளார்” என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
சுவாதி படுகொலையில் தொடர்புடைய கருப்பு முருகானந்தம் மீது 38 வழக்குகள் உள்ளன. அதில் 20 வழக்கு பிரிவுகளின் கீழ் உள்ள ஒரு இந்திய பிரஜையான கருப்பு முருகானந்தம் மீது ‘மதக் கலவரம் தூண்டுதல்’, ‘இந்து இஸ்லாமியர்களுக்கு இடையில் வெறுப்பை தூண்டுதல்’ உள்ளீட்ட வழக்கு பிரிவுகளும் உள்ளன. அவர் எவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதை பாருங்கள்.
“கருப்பு முருகானந்தத்தை அரசியலுக்கு அழைத்து வந்தவர் எச்.ராஜா.”
“பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் பதவி.”
“2016-இல் சட்டசபை தேர்தலில் தஞ்சையில் வேட்பாளராக அறிவிப்பு.”
“இந்திய பிரதமர் மோடிக்கு நெருக்கமான நட்பு. மோடி இவருக்காக தமிழ்நாட்டுக்குள் தேர்தல் பிரச்சாரம்.”
“சில மாதங்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் முக்கிய பதவி.”
இப்படி பெரும் வாய்ப்புகளால் சூழப்பட்டுள்ள இந்திய பிரஜை கருப்பு மீதான வழக்குகளுக்கு ‘இந்திய சட்டம்’ பாய்ந்ததன் விளைவுதான் இத்தனை பெரும் மதிப்பு கருப்புக்கு கிடைத்துள்ளது.
இந்த இலட்சணத்தில் இருக்கும் ‘இந்திய சட்டப் பிரிவுகள்’ என் மீது பாயும் வலிமை அதற்கு கிடையாது. என் மயிரில் ஒன்றைக் கூட இந்திய சட்டத்தால் புடுங்க முடியாது என்கிறார்கள் எனது மனித உரிமை மீறல் அமைப்பைச் சேர்ந்த ப்ரெஞ்ச் சட்ட ஆலோசகர்கள்.
கருப்பு முருகானந்தம் குறித்து நான் அவதூறு செய்வதாக கூறி திருப்பூரில் போலிசில் புகார் செய்த கருப்புவின் வழக்கு பிரதியே ஒன்றரை மாதங்களாகியும் எனக்கு கிடைக்கவில்லை. இதில் சென்னை மத்திய சைபர் க்ரைம் வேறு பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடுகின்றன. இந்த வழக்கு பிரதியாவது என் கைக்கு கிடைக்குமா என்று பார்ப்போம்.
சுவாதி / ராம்குமார் படுகொலைகள் விவாதங்களில் இருந்து திசைமாறிவிடக் கூடாது என்று கவனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அவப்போது இப்படி காமெடி செய்து கொண்டிருப்பவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தியாவிற்குள் இருக்கும் க்ரீமினல்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் மத்திய அரசும் முயற்சிக்கட்டும். பிறகு அவர்களுடைய அரசியலை விவாதமாக்கும் சமூக ஆவலர்கள் மீது இந்திய சட்டத்தை பாய்ச்சட்டும்.
இது கருப்பு முருகானந்தம் மீதுள்ள வழக்குகள்:
1)cr.no.700/94-u/s 147,148,323,2A PPD act
2)cr.no.168/2005-u/s 147,148,324,307 IPC
3)cr.no.122/96 (CC no.147/2000)-u/s 147,341,427,294(b),506(i)IPC
4)cr.no,48/97 (PRC 07/2001)- u/s 147,341,294(b),506(2)IPC,sec 3 PPD Act
5)cr.no.459/97-u/s 427,435,506(2)IPC
6)cr.no.455/97(PRC 9/02) u/s 147,148,307 IPC
7)cr.no.15/98-u/s 294(b),506(2)IPC
8)cr.no.687/98-u/s147,323,336 IPC
9)cr.no.295/99-u/s 225,353,506(2) IPC
10)cr.no.296/99-(PRC 35/07) u/s 147,148,427,435,307,3A PPD Act
11)cr.no.333/2001-u/s 147,148,323,307 IPC
12)cr.no.327/2005(PRC No.3/06)-u/s 147,148,307,25(1)a Indian arms act and 3A PPD Act
13)cr.no.330/2005-(CC 176/2005) u/s 143,188,285,295(a)IPC
14)cr.no.322/2005-u/s 107 IPC
15)cr.no.333/2005-u/s 147,148,452,395, IPC and 3(i) PPD Act
16)cr.no.195/2012,-u/s 147,148,294(b),324,506(2) IPC and 3(i) PPD Act 4 of W.H.Act
17)cr.no.337/2007-u/s 147,148,307 IPC
18)CC.no.204/2000-u/s 147,225,353,506(2) IPC
19)cr.no.313/13-u/s 143,188,504, IPC
20)cr.no.546/2013 a3,(351/2013) 107 Cr PC
தமிழச்சி
38 வழக்குகள் உள்ள பிஜேபி முருகானந்தத்தையே இந்திய சட்டத்தால் தண்டிக்க முடியவில்லை - தமிழச்சியின் கிண்டல்
Reviewed by மறத்தமிழன்
on
October 05, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
October 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.