October 27, 2016
வடகிழக்கு பருவமழை வரும் 30 ஆம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30ம் தேதி துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், மத்திய கிழக்கு வங்ககடலில் நிலவிவரும் கியாந்த் புயல், அடுத்த 3 நாட்களில் மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகக் கூறினார்.
மீனவர்கள் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆந்திர கடல் பகுதியை நோக்கி செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 30ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை வரும் 30 ஆம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.