October 4, 2016
வீட்டிற்கு வந்த ஆணை கட்டிப் போட்டு 3 பெண்கள் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை!
தென் ஆப்பிரிக்காவில் உதவிக்கு வந்த ஆண் ஒருவரை 3 பெண்கள் கட்டிப்போட்டு கூட்டாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.சில தினங்களுக்கு முன்னர் குறித்த நகரில் வசித்து வந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு வந்த இளம்பெண் ஒருவர் ‘என்னுடைய வீட்டில் மின்சார பிரச்சனை இருக்கிறது. தயவு செய்து வந்து உதவி செய்யுங்கள்’ என கேட்டுள்ளார்.
உதவி கேட்ட பெண் நன்கு அறிமுகமானவர் என்பதால், நபரும் அவரை பின் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டை திறந்து உள்ளே சென்றதும், அங்கு ஒரு இருக்கையில் மற்றொரு இளம்பெண் இருந்துள்ளார். எனினும், அவர் மீது நபர் கவனம் செலுத்தவில்லை.
நபர் உள்ளே நுழைந்ததும் கதவுக்கு பின்னால் நின்றுருந்த 3 ஆவது பெண் ஒருவர் திடீரென கதவை பூட்டியுள்ளார்.இந்த 3 பெண்களும் நபருக்கு அறிமுகமானவர் என்பதால், அவர் இதனை பெரிதாக எடுக்கவில்லை.
அப்போது மூன்று பெண்களில் ஒருவர் ‘உங்களுடன் நாங்கள் மூவரும் உறவுக்கொள்ள விரும்புகிறோம்’ என கூறியுள்ளார்.பெண் தன்னிடம் கிண்டல் செய்கிறார் என எண்ணிய நபர் மூவரையும் பார்த்து சிரித்து விட்டு ‘மின்சார பிரச்சனை எங்கு இருக்கிறது’? எனக் கேட்டுள்ளார்.
குறித்த நபர் தங்களின் வழிக்கு வரமாட்டார் என்பதை உணர்ந்த 3 பெண்களும் திடீரென நபர் மீது பாய்ந்துள்ளனர்.இரு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு விபத்தில் நபரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஒரு கையை அவரால் பலமாக கையாள முடியாது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு, மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் தாக்கியதை அவரால் தடுக்க முடியவில்லை. எனினும், இறுதி வரை போராடிய அந்த நபரை கட்டிப்போட்டு 3 பெண்களும் கூட்டாக இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு வீட்டிற்கு சோகமாக திரும்பிய அந்த நபர் நடந்தவற்றை தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.சகோதரன் கூறுவதை கேட்ட அவர் பலமாக சிரித்துள்ளார். சகோதரன் கூறியதை அவர் நம்பவில்லை.
ஆனால், இரண்டு தினங்களுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவியுள்ளது.நபரை பலாத்காரம் செய்ததை அந்த 3 பெண்களும் இரகசியமாக வீடியோ எடுத்திருந்தது அப்போதுதான் அந்த நபருக்கு தெரியவந்தது.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபரின் சகோதரி இதனை உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.நபர் எதிர்ப்பார்த்தது போல் அவரின் முறைப்பாட்டினை தெரிவித்தபோது பொலிஸார் அதனை நம்பவில்லை. ஆனால், வீடியோ ஆதாரத்தை காட்டிய பிறகு பொலிஸார் உடனடியாக அந்த 3 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த ஆணை கட்டிப் போட்டு 3 பெண்கள் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.