Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளை அமைப்பதற்கு வைகோ கடும் கண்டனம்



நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளை அமைப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 217வது நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள கயத்தாறில், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் வைகோ, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு, அங்குள்ள மணிமண்டபத்தில் கட்டபொம்மனின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கூடங்குளத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி கூடுதல் அணு உலைகளை அமைப்பது கண்டனத்திற்குரியது என்றார். காவிரி விவாகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் இழைத்து விட்டதாகவும் வைகோ குற்றம் சாட்டினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.