புதுடெல்லி
ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 என்ற மலிவு கட்டணத்தில் சராசரி மக்களும் பயணம் செய்யும் விமான சேவை ஜனவரி மாதம் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு திட்டம்
பிராந்திய அளவில் இரண்டாவது நிலை நகரங்களையும், மூன்றாவது நிலை நகரங்களையும் விமான போக்குவரத்தின்மூலம் இணைக்கவும், சராசரி இந்திய மக்களும் விமானத்தில் பயணம் செய்யவும் வகைசெய்து மத்திய அரசு ‘உடன்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜூ, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘சராசரி இந்திய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலான இந்த திட்டத்தை மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன், நம்பிக்கையுடன் வடிவமைத்து இருக்கிறோம். இந்த திட்டத்தின்கீழ் முதல் விமானம், 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது பயணத்தை தொடங்கும்’’ என கூறினார்.
ஒரு மணி நேரம் பயணம்
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–
* தற்போது பயன்பாட்டில் இருக்கிற விமான நிலையங்களும், பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களும் இணைக்கப்படும். இந்த திட்டத்தில் பங்கேற்கிற விமான நிறுவனங்களின் விமானங்களில் பாதி இருக்கைகள் 476 கி.மீ. முதல் 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கானவை. அதாவது ஒரு மணி நேர பயணத்துக்கு உரியவை. விமான கட்டணம் ரூ.2,500 ஆகும். மீதியை சந்தை அடிப்படையில் நிர்ணயித்துக்கொள்ளலாம்.
* நல்ல லாபம் தருகிற தடங்களில் விமான கட்டணத்துக்கு வரி விதிக்கப்படும். இதன்மூலம் பயணிகள் கட்டணம் கூடும்.
* பிராந்திய இணைப்பு திட்டத்தின்கீழ் விமானங்களில் கட்டணம் ரூ.1,420 முதல் ரூ.3,500 வரையில் இருக்கும். ஹெலிகாப்டர்களில் 30 நிமிட பயண கட்டணம் ரூ.2,500 ஆக இருக்கும்.
* பிராந்திய இணைப்பு திட்டத்தின்கீழ் வாரத்துக்கு 3 முதல் 7 பயண சேவைகள் வரை இருக்கும்.
உலகிலேயே முதல் முறை
இந்த திட்டம் பற்றி சிவில் விமானத்துறை ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்கா கூறுகையில், ‘‘இப்படி ஒரு திட்டத்தை அமல்படுத்துவது உலகிலேயே இதுவே முதல் முறை. வேறு எங்கும் செயல்படுத்தாத திட்டத்தை இங்கே செயல்படுத்துகிறோம்’’ என குறிப்பிட்டார்.
சிவில் விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என். சவுபே கூறும்போது, ‘‘விமான கட்டணத்துக்கு வரி விதிப்பது பற்றிய விதிகள் 2 நாளில் அரசிதழில் வெளியிடப்படும், இது தொடர்பான நிர்வாக உத்தரவு இந்த மாத இறுதியில் வெளியாகும்’’ என குறிப்பிட்டார். அதே நேரத்தில் வரிவிதிப்பு குறைந்த அளவில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.