Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

வாரணாசியில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி: உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்



உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

புகழ்பெற்ற ஆன்மீக குருவான ஜெய் குருதேவ், வாரணாசி அருகே உள்ள தூம்ரி கிராமத்தில் 2 நாள் தங்குவதற்காக வந்துள்ளார். கங்கைக் கரையை ஒட்டியுள்ள அந்த கிராமத்திற்கு வந்துள்ள அவரைக் காண, அவரது பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.