October 13, 2016
விஜய் மல்லையாவின் கோவா கடற்கரை சொகுசு பங்களா 19 ம் தேதி ஏலம்
கிங்பிஃஷர் மதுபான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா, ஸ்டேட் பேங்க் ஆஃப் உள்ளிட்ட வங்கிகளிடம் வாங்கி இருந்த ரூ. 9,000 கோடி கடனை திருப்பி கொடுக்காமல் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார்.
தற்போது அவர் லண்டனில் இருக்கிறார். விஜய் மல்லையா தலைமறைவான பிறகு அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் அவரது சொத்துகளை முடக்கின. கடனை வசூலிக்கும் வகையில் அந்த வங்கிகள் விஜய் மல்லையாவின் சொத்துகளை ஏலம் விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், மும்பையில் உள்ள கிங்பிஷர் அலுவலகம், மல்லையாவின் தனி விமானம் ஆகியவற்றை ஏலம் விடும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவற்றை ஏலம் எடுக்க ஒருவர் கூட முன்வரவில்லை.
இந்தநிலையில் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கோவாவில் உள்ள சொகுசு பங்களாவை ஏலம் விட வங்கிகள் முடிவு செய்துள்ளன.
கோவா கடற்கரையில் அமைந்துள்ள இந்த பங்களா 12,350 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கிறது. இந்த பங்களாவுக்கான ஏலம் வருகிற 19 ம் தேதி நடைபெறுகிறது. பங்களாவை ஏலத்தில் எடுக்க பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 5 ஓட்டல் துறை மற்றும் ஊடகத்துறையை சேர்ந்த பிரபலங்கள் இந்த சொகுசு பங்களாவை பார்த்து சென்றதாக தகவல். இந்த பங்களாவுக்கு ஆரம்ப விலையாக ரூ.85.29 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவின் கோவா கடற்கரை சொகுசு பங்களா 19 ம் தேதி ஏலம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.