October 27, 2016
சிறைக்காவலரைக் கொன்று விட்டுத் தப்பியோடிய 174 கைதிகளை தேடும் பணி தீவிரம்!
ஹைதி நாட்டில் சிறைக்காவலரைக் கொன்று விட்டுத் தப்பியோடிய 174 கைதிகளைத் தேடும் பணிகள் அமெரிக்காவின் உதவியுடன் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஹைதி நாட்டில் அர்க்காஹேய் நகரில் உள்ள சிறையில் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறைக் காவலர்கள் தங்கும் அறைக்குள் நுழைந்த சில கைதிகள் அங்கிருந்த ஐந்து துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சிறைக் கதவைத் திறந்துவிட்டனர்.
பின்னர் காவலரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு 174 கைதிகள் தப்பியோடினர். இதையடுத்து, அமெரிக்க அமைதிப் படையின் உதவியுடன் நடந்த தேடுதல் நடவடிக்கையில் பதினோரு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். ஒரு கைதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
சிறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைவரும் சோதனைக்குப் பின்னரே பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே, சிறைக் கைதிகள் தப்பிய பகுதிக்கு அமெரிக்க குடிமக்கள் யாரும் செல்லவேண்டாம் என ஹைதியில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
சிறைக்காவலரைக் கொன்று விட்டுத் தப்பியோடிய 174 கைதிகளை தேடும் பணி தீவிரம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.