October 23, 2016
16 வயது சிறுவன் உடலில் உருவான பெண் உறுப்பு நீக்கம்
பெங்களூருவில் சிறுவன் உடலில் இருந்த பெண்ணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த கிரண் என்ற சிறுவனின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடலில் பெண்ணுறுப்பும் ஆணுறுப்பும் ஒருங்கே அமைந்து காணப்பட்டது. இந்நிலையில், சிறுநீரகம் கழிப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் உடலின் உட்புறத்தில் பெண்களின் உடலில் இருக்கும் கருப்பை, கருப்பைக்கு செல்லும் பாலோப்பியன் குழாய் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது போன்று உலகில் 10ல் ஒருவருக்கு பெண்ணுறுப்பு மற்றும் ஆணுறுப்பு ஒரே உடலில் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் மோகன் கேசவமூர்த்தி, டாக்டர் ஷகிரர் தர்பேஸ் ஆகியோர் கிரணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆணின் இனப்பெருக்க உறுப்பும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பும் ஆணின் உடலில் இருப்பது மருத்துவத்துறையில் அரியது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அறிவியலில் இக்குறைபாடு பிஎம்டிஎஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆணுக்கு எக்ஸ்.ஒய். குரோமோசோம்களுக்கு பதிலாக தந்தையின் குரோமோசோம்கள் இணைவதில் பிரச்னை ஏற்படும்போது இவ்வாறு உருவாவதுண்டு என்று கூறப்படுகிறது. ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்காததாலும் இது போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இது தொடர்பாக டாக்டர் கேசவமூர்த்தி கூறுகையில், ‘‘இக்குறைபாட்டை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யாவிட்டால் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டு பிரச்னையை உண்டாக்கும் என்று சிறுவனின் பெற்றோரிடம் விளக்கினோம். இதனால், அவர்கள் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து வயிற்றுப் பகுதியில் இருந்த கருப்பை, பாலோப்பியன் குழாய், டெஸ்டிஸ், ஓவரி உள்ளிட்டவற்றை வெற்றிகரமாக அகற்றினோம். எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது’’ என்றார்.
16 வயது சிறுவன் உடலில் உருவான பெண் உறுப்பு நீக்கம்
Reviewed by மறத்தமிழன்
on
October 23, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
October 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.