Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 8, 2016

ஜெயின் மத சம்பிரதயாப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சிறுமி மரணம்



ஜெயின்( சமண)  மத சம்பிரதாயம் மற்றும் வழக்கத்தின்படி, இந்த பூவுலகில் வாழ விரும்பாத முதுமக்கள் உணவு, தண்ணீர் அருந்தாமல் உண்ணாநிலையை கடைபிடித்தும், தவக்கோலம் பூண்டும் ’சவ்மாஸா’ அல்லது ‘சந்த்தாரா’ எனப்படும் ஜீவசமாதி நிலையை அடைவதுண்டு.

ஆனால், இத்தகைய வழியில் உயிரை மாய்த்துக்கொள்ள சட்டம் அனுமதிப்பதில்லை. எனினும், வடமாநிலங்களில் இதுபோன்ற ‘சந்த்தாரா’ எனப்படும் ஜீவசாமாதி நிலையை அடைவது சகஜமான மத சம்பிரதாயமாக உள்ளது.

இதேபோல், இந்த உலக வாழ்வை துறக்க ஐதராபாத் நகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவியான ஆராதனா(13) என்பவர் தீர்மானித்தார். இவரது தந்தை செகந்திராபாத் பகுதியில் உள்ள பாட்பஜார் பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

புதுமணப்பெண்ணைப்போல் அலங்கரிக்கப்பட்டு, தங்கமுலாம் பூசப்பட்ட ரதத்தில் அமர்ந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட ஆராதனாவின் ‘சந்த்தாரா’ எனப்படும் உண்ணாநிலை சமீபத்தில் பத்தாவது வாரத்தை நெருங்கியபோது உள்ளூர் ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்கள் வெளியாகின. ஆரதனாவுடன் பலர் செல்பி எடுத்துக்கொள்ள பிரியப்பட்டனர்.

செகந்திராபாத் பகுதியை சேர்ந்த தெலுங்கானா மாநில மந்திரி பத்மா ராப் கவுட் முன்னிலையில் தனது உண்ணாவிரதத்தை ஆராதனா முடித்து கொண்டார். இதையடுத்து, தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆராதனா, இருநாட்களாக அளிக்கப்பட்டுவந்த சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தார்.

’பால தபஸ்வி’ (குழந்தை தவயோகி) என்ற பட்டத்துடன் மரணம் அடைந்த ஆராதனாவின் இறுதியாத்திரையில் 500-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தந்தையின் நகைக்கடையை பிரபலப்படுத்தவே ஆராதனா இந்த விஷப்பரீட்சையீல் ஈடுபட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகிவரும் நிலையில், ‘சந்த்தாரா’ எனப்படும் ஜீவசாமாதி நிலையை அடைவது சிறுவர் சிறுமியர்களுக்கு சற்றும் பொருத்தமற்றது, எனவே, ஆராதனாவின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.