Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 8, 2016

கணவன் ‘ஜாப்’ மனைவி ‘ஜாப்’..!1 வயது குழந்தையும் ‘ஜாப்’..! வேலைக்கார பெண்..கைது..! தில்லாலங்கடி..!!



கணவன் மனைவி இருவருமே சாப்ட்வேர் நிறுவனத்தில் கை நிறைய சம்பாதிப்பவர்கள். பெரிய ஆச்சாரமான குடும்பம் வேறு..! இவர்களுக்கு பாத்து மாதத்தில் ஒரு அழகான ஆண்குழந்தை.பெங்களூர் மடிவாலாவில் பெரிய பிளாட். வசதியான வாழக்கை.

குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு வேலைக்காரப்பெண் இருந்தார். அவரை நம்பி அந்த செல்லக் குழந்தையை விட்டுச்சென்றார்கள். இருவரும் ஒரே காரில் சென்று திரும்புவார்கள்.

அன்று அந்த நிறுவனத்தின் சேர்மன் அப்பா தவறி விட்டதால் மதியமே விடுமுறை அறிவித்து விட்டார்கள். இருவரும் வழியில் காரை நிறுத்திவிட்டு ஒரு பெரிய ஹோட்டலில் சாப்பிடலாம் என்று காரை  நிறுத்த கையில் குழந்தையுடன் ஒரு பெண் பிச்சை கேட்டு வந்திருக்கிறாள்.

அந்த குழந்தையைப் பார்த்த இருவருக்கும் அதிர்ச்சி தங்கள் குழந்தை போலவே இருகிறதே என்று மீண்டும் மீண்டும் பார்த்து விட்டு சாப்பிடாமல் வேகமாக வீட்டிற்கு  வந்திருக்கிறார்கள்.

வேலைக்காரிக்கு பயங்கர அதிர்ச்சி. குழந்தை எங்கே என்று கேட்க,அவள் விழிக்க, போலீஸ்க்கு தகவல் கொடுத்து  விட்டனர்.

போலீஸ் வந்து  நன்றாக கவனிக்க, தினமும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போனதும் பிச்சை எடுக்கும் கும்பலுக்கு தினமும் 200 ரூபாய் பேசி அனுப்பியிருக்கிறாள் அந்த வேலைக்காரி.

படு அப்செட் ஆகிவிட்டனர் இருவரும். இப்போது அந்த மனைவி ஜாப்பை ரிசைன் பண்ணி விட்டு குழந்தையை கவனிக்கிறார்.. கொடுமை போங்க..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.