யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி வட மாகாணம் முழுவதும் முழு அடைப்புக்குத் தமிழ்க் கட்சிகள் விடுத்த அழைப்பை ஏற்று, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் நடமாட்டம் இன்றி யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகிய இருவரும் கடந்த 20-ம் தேதி நள்ளிரவு யாழ்ப்பாணம் கொக்குவில் உள்ள குளப்பிட்டி சந்தி பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வாகனங்கள் வேறுவழியாகத் திருப்பிவிடப்பட்டது. போராட்டத்தின் முடிவில் வட மாகாண ஆளுநரின் பிரதிநிதியிடம் புகார் மனுவை அளித்தனர். இதேவேளையில், கடந்த திங்கட்கிழமை மாணவர் விஜயகுமார் சுலக்சனின் இறுதி நிகழ்வுகள் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதையடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி இலங்கையின் வட மாகாணம் முழுவதும் முழு அடைப்புக்கு இலங்கையில் உள்ள 6 தமிழ்க் கட்சிகள் அழைப்புவிடுத்து இருந்தன.
இந்த அழைப்பை ஏற்று யாழ் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி யாழ்ப்பாண நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.