தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று யுகேஜி படிக்கும் இரட்டை குழந்தைகளான அண்ணன், தம்பியை சரமாரியாக அடித்துள்ளார் தலைமை ஆசிரியை கிரிஜா.
தூத்துக்குடி மாவட்டம், வாழவல்லான், அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன். மார்கழி 16 என்ற திரைப்படத்தை இயக்கியவர். இவரது மகன்கள் தருண், தரண். இரட்டை குழந்தைகளான இவர்கள் இருவரும் வடக்கு ஆத்தூர், எஸ்.சண்முக சுந்தர நாடார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகின்றனர். இந்த பள்ளியை சென்னையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் நடத்துகிறது.
மாணவர்கள் இருவரும் வேறு வேற வகுப்பில் படிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி தருண், தரண் ஆகியோர் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி பள்ளி தலைமை ஆசிரியையிடம், வகுப்பு ஆசிரியைகள் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது தலைமை ஆசிரியை கிரிஜா, தருணையும், தரணையும் பிரம்பால் அடித்துள்ளார். இதில் வலிதாங்க முடியாமல் இருவரும் கதறி அழுதுள்ளனர். பிறகு வீட்டுக்குச் சென்ற இருவரும் பள்ளியில் நடந்த சம்பவத்தை அவர்களது அம்மா ரத்னகுமாரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர்களின் தாய்மாமன் ரஞ்சித் கூறுகையில், "ஸ்கூலிருந்து தருணும், தரணும் அழுது கொண்டே வந்தனர். அப்போது அவர்களது காலில் பிரம்பால் அடித்த காயங்கள் இருந்தன. அதுகுறித்து என்ன நடந்தது என்று கேட்டபோது, தலைமை ஆசிரியை கிரிஜா, வீட்டுப்பாடங்களை செய்யவில்லை என்று அடித்ததாக கூறினர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் போனில் பேசினேன். அவர், வீட்டுப்பாடம் செய்யாததால் தலைமை ஆசிரியை அடித்ததாகக் கூறினார். பிறகு, இந்த முறை மட்டும் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். ஏற்கெனவே தருண், தரணின் அக்காள் மகதி கடந்த ஆண்டு 5-ம் வகுப்பு அதே பள்ளியில் படித்தார். அப்போது அவரையும் பள்ளியில் சரமாரியாக அடித்தனர். இதுகுறித்து அப்போது கேட்டபோது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்கள். இப்போதும் அதுபோல சொல்கின்றனர். இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் சென்றோம். அங்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர் மன்னிப்பு கேட்டதன் பேரில் புகார் கொடுக்கவில்லை" என்றார்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் போனில் பேச முயன்றோம். ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.