முதல்வர் உடல்நிலை குறித்து தமிழக அரசு முறையான விளக்கம் அளித்து, வீண் புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அப்போலோ மருத்துவமனையின் செய்திக்குறிப்புகளை பார்க்கவில்லையா என்று கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை அப்போலோ மருத்துவமனை, ஆளுநரின் செயலாளர், தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2 நாட்களுக்கு பிறகு, டாக்டர்கள் அளித்த பேட்டியில், ‘முதல்வர் நலமாக உள்ளார், 2 நாட்களில் வீடு திரும்பி விடுவார், அவருக்கு ஓய்வு தேவை’ என்றனர். ஆனால் திடீரென்று லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஜான் வந்து அப்போலோ மருத்துவமனையில் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். முதல்வருக்கு என்ன நோய் பாதிப்பு என்பதை இது வரை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
இந்த நிலையில், முதல்வருடைய உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள மக்களும், அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். அ.தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், மருத்துவமனை முன்பு பூஜைகள் நடத்த போலீஸார் அனுமதிக்கின்றனர். மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்றாலும் தடுக்கிறார்கள். முதல்வரின் உடல்நிலை குறித்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், வார பத்திரிகைகளில் பல புரளிகள் கிளப்பப்பட்டு வருகிறது. பல இடங்களில் திடீர் திடீரென கடைகள் மூடப்படுகின்றன. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் முதல்வரை சந்தித்துள்ளார். அரசு அதிகாரிகளும் சந்தித்து வருகிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் வெளியே தெரியவில்லை.
முதல்வர் பற்றிய புகைப்படம் இதுவரை வெளிவரவில்லை. யாராவது முதல்வர் பற்றி கூறினால், புரளியை கிளப்புவதாக கூறி போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்கிறார். இதுவரை முதல்வரை சந்தித்தவர்கள் பற்றிய புகைப்படம் வெளிவரவில்லை. முதல்வர் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வரின் உடல் நிலை குறித்தும், மனநிலை குறித்தும், அவரது புகைப்படம் வெளியிட கோரியும் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு மனு அனுப்பினேன். எந்த முடிவும் அறிவிக்கவில்லை. 10 நாட்களாகியும் முதல்வரின் உடல்நிலை பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. எனவே, வீண் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு தெளிவான விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிடும் செய்திகுறிப்புகளை மனுதாரர் பார்க்கவில்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது என கண்டித்ததோடு, இது விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.