Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 2, 2016

கோட்டையில் தீக்குளிக்க வந்த பெண் இன்ஸ்பெக்டர்! அதிகாரிகளின் அழுத்தம் காரணமா?


தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தலைமைச் செயலகத்தில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் தீக்குளித்து தற்கொலையில் ஈடுபட்டுள்ள சம்பவம் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் காஞ்னா. இவர் 1999ம் ஆண்டு பேட்ஜ். தடகள வீராங்கனையாக இருந்ததோடு, பல பதக்கங்களை பெற்றிருக்கிறார். சென்னை எம்.கே.பி. நகர் உள்பட வடசென்னையில் பல இடங்களில்  சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காஞ்சனா, பதவி உயர்வு பெற்று தற்போது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்று தலைமைச் செயலகத்தில் பணி வழங்கப்பட்டு இருந்தது. தலைமைச் செயலக 4வது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் காஞ்சனா ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் சிறுவாணியில் தடுப்பணை கட்டு விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில் மண்எண்ணெய் ஊற்றியவாறு, "எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. என்னை விட்டு விடுங்கள்" என்று கூறியபடியே காஞ்சனா வந்தார். அப்போது உடலிருந்து இருந்து மண்எண்ணெய் வாசனை வீசியது. இதை பார்த்த சக போலீஸார்  சுதாரித்துக் கொண்டு தற்கொலை முயற்சியை தடுத்தனர். இந்த சம்பவம் கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "இன்ஸ்பெக்டர் காஞ்சனாவுக்கு கடந்த சில மாதங்களாக உயரதிகாரிகளின் அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்தார். இன்று கூட பாதுகாப்பு பணிக்கு வந்த அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். இந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்படும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.