மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்களைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது. இதற்கு கிராமப்புறப் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புஉணர்வு குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.
அரசுப் பணிகளில் கொட்டிக்கிடக்கும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து விளக்குகிறார், சென்னையில் உள்ள 'இந்தியன் ஐ.ஏ.எஸ் அகாடமி'யின் இயக்குநர் சுஜாதா ரமேஷ்.
''மத்திய, மாநில அரசுகளின் பணிகளுக்கான தேர்வுகளில் பெண்கள் எளிதில் தேர்ச்சி பெற முடியும். குறிப்பாக ஆசிரியர், செவிலியர், கிராம சேவகர்கள், வங்கி, தபால் துறைப் பணிகள் பெண்களுக்கு மிகவும் இணக்கமானவை. மத்திய அரசு நடத்தும் யூ.பி.எஸ்.சி மற்றும் மாநில அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பல குரூப் நிலைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளோமா, டிகிரி என கல்வித் தகுதிக்கு ஏற்ப தேர்வுகளை எதிர்கொள்ளலாம்.
பயிற்சி மையங்கள் இல்லை, வெளியூர் சென்று பயிற்சி பெற பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லை, விழிப்புஉணர்வு இல்லை என்ற காரணங்களை பெண்கள் புறந்தள்ளி முயற்சியில் இறங்கலாம். பெரும்பாலான அரசுப் பணித் தேர்வுகளில் கேள்விகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. அதனால் பள்ளிப் பாடங்களையும், குறிப்பாக தமிழ் இலக்கணப் பாடங்களையும் தெளிவுறப் படித்தாலே அதில் வெற்றிபெற்றுவிடலம்.
தமிழ்நாடு அரசுப் பணிகளில், எல்லா பிரிவு பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு முறை உள்ளதால், சற்று கூடுதல் முயற்சி, ஆர்வத்துடன் படித்தால் எளிதாக அரசுப் பணிக்குச் செல்ல முடியும். நிரந்தர வேலை, சலுகைகள், கெளரவம், பாதுகாப்பான சூழல் என ஏராளமான சாதகமான அம்சங்கள் பெண்களுக்கு அரசு பணிகளில் கிடைக்கும்.
குறிப்பாக, பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும், மத்திய அரசின் 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரையிலான கல்வித் தகுதி கொண்டவர்கள் எதிர்கொள்ளக் கூடிய SSC(Staff Selection Commission) தேர்வுகள், ரயில்வே தேர்வுகள் குறித்து நகர்ப்புற, கிராமப்புறத்தினர் பெரும்பாலானோருக்கு தெரியாமல் இருக்கிறது. அதுபோல பள்ளியில் படிக்கும்போதே என்சிசி, சாரண சாரணியர் இயக்கப் பயிற்சிகளைப் பெற்று, மன தைரியத்துடன் இருக்கும் மாணவிகள், எளிதாக காவல்துறை பணிகளுக்குச் செல்ல முடியும். பெண் காவலர்களுக்கென 'மகளிர் காவல் நிலையங்கள்' இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பெரும்பாலானோரிடம் செல்போன் இருப்பதால் அதன் வாயிலாகவும், செய்தித்தாள், சேனல்கள் வாயிலாகவும் அரசுத் தேர்வு அறிவிப்புகளை தெரிந்துகொண்டு, தேர்வுகளை எழுதி, வெற்றிபெறலாம்.

'பெண்களை எதுக்கு படிக்க வைக்கணும்?' என்ற மனநிலை பெரும்பாலான பெற்றோர்களிடம் குறைந்துள்ள சூழலில், அரசுத் தேர்வுகள் குறித்த விழிப்பு உணர்வு இன்மையே பல பெண்களும் அரசுப் பணிகளைப் பெறத் தடையாக இருக்கிறது. கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் ஏதாவது அறிவிப்புகள் வருகின்றனவா என்பதை அவ்வப்போது கவனித்து, படித்து, தேர்வெழுதினால்... பெண் ஊழியர்கள் பெருகுவார்கள் அரசுப் பணிகளில்!"
மாநில அரசு தேர்வுகள் :
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் - www.tnpsc.gov.in
சீருடைப் பணியாளர் தேர்வுகள் - www.tnusrb.tn.gov.in, www.tnusrbexams.net
ஆசிரியர் பணி தேர்வுகள் - www.trb.tn.nic.in
மத்திய அரசு தேர்வுகள் :
ரயில்வே தேர்வுகள் - www.rrbbnc.gov.in , www.rrbchennai.gov.in
சிவில் சர்வீஸ் தேர்வுகள் - www.upsc.gov.in
உள்துறை அமைச்சக தேர்வுகள் - www.mha.nic.in
வங்கித் தேர்வுகள் - www.ibps.in, www.sbi.co.in, www.ibpsrecruitment.in
பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் : www.ssc.nic.in

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.