Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 20, 2016

42 பேருந்துகளைக் கொளுத்த ... 100 ரூபாயும்,மட்டன் பிரியாணியும்!


காவேரி நதிநீர் பிரச்னை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே போராட்டாங்கள் வலுத்து வருகிறது, நேற்று, இரவு முதல் மீண்டும் கர்நாடக அரசு  தண்ணீரை நிறுத்தி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி, கர்நாடகாவில் ஒரு தனியார் பேருந்தி டிப்போ, தீயிட்டு கொளுத்தப்பட்டது.42 பேருந்துகள் தீக்கிரையானது.அந்த சம்பவத்தில் கைதான 11 பேரில், 22 வயது பெண்ணான பாக்யாவும் ஒருவர், அங்கு இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து பாக்யா தான் இதைத் தூண்டியது என முடிவுக்கு வந்துள்ளதாம் காவல்துறை.

ஆனால், இப்படி பாக்யா செய்ததற்கு இன வெறி போன்ற விஷயங்கள் காரணம் இல்லை. பாக்யாவின் தாயார் எல்லெம்மா செய்தியாளர்களிடம், " 100 ரூபாயும் , மட்டன் பிரியாணியும் தருவதாக சொல்லி, பாக்யா போராட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.அன்று மதியம் பாக்யா வீட்டில் இருந்தபோது, அவரை போராட்டத்திற்கு அழைத்தனர். " KPN டிப்போ இருக்கும் கிரிநகருக்கு அருகில் தான் பாக்யாவின் வீடு இருக்கிறது.

சிசிடிவி பதிவுகளில் வேறு சில பெண்மணிகள் இருந்தாலும், அந்த பதிவுகள் தெளிவாக இல்லை என்கிறது காவல்துறை. அன்று மாநிலம் முழுவதும் நடந்த கலவரத்தில் சுமார் 400 பேர் கைதானார்கள். அதில், பாக்யா மட்டும் தான் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.