Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 27, 2016

ஓடும் காரில் பெண் டாக்டருக்கு நேர்ந்த கொடுமை!


சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாதவி  (பெயர் மாற்றம்). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார். இவர், நேற்று தனியார் கால்டாக்ஸியை முன்பதிவு செய்தார். அந்தக்காரை மருது என்பவர் ஓட்டினார். காரில் ஏறிய மாதவி, பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் கார் மின்னல் வேகத்தில் பறந்ததது.   கிழக்கு கடற்கரை சாலை விஜிபி அமைதி கோயில் அருகே கார் திடீரென நின்றது. அப்போது காரின்  பின்பக்கத்தின் கதவை திறந்து கொண்டு இரண்டு வாலிபர்கள் ஏறியுள்ளனர். இதற்கு மாதவி எதிர்ப்பு தெரிவித்து டிரைவர் மருதுவிடம் தகராறு செய்துள்ளார். இந்த சமயத்தில் கார், வேகமாக கிழக்கு கடற்கரை சாலையில் புறப்பட்டு சென்றது. ஓடும் காரிலேயே மாதவி தகராறு செய்ததோடு, 'ஹெல்ப்' என்று கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அந்த காரை துரத்தினர். இதைப்பார்த்த மருதுவும் காரை வேகமாக ஓட்டினர்.


 ஒருவழியாக திருவான்மியூர் சிக்னலுக்காக கார், நின்ற போது காரை பொது மக்கள் மடக்கிப்பிடித்து மாதவியை மீட்டனர். இதற்கிடையில் அந்த இரண்டு வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர். மருதுவை மட்டும் பிடித்து நீலாங்கரை போலீசில் பொது மக்கள் ஒப்படைத்தனர்.

 போலீஸார், மருதுவிடம் விசாரித்த போது, காரில் ஏறிய இரண்டு வாலிபர்களின் பெயர் வெங்கடேஷ், சக்திவேல் என்று தெரிந்தது. இதையடுத்து போலீஸார் மருது மூலம் அவர்கள் இருவரையும் பிடித்தனர். மூவரிடம் போலீஸார் விசாரித்து அவர்களை கைது செய்தனர்.


இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "மாதவி, கால்டாக்சியை முன்பதிவு செய்த போது கட்டண 'சேரிங்' என்றே குறிப்பிட்டுள்ளார். இதனால் வெங்கடேஷ், சக்திவேலை மருது ஏற்றியதாக தெரிவித்துள்ளார். இதற்கு மாதவி எதிர்ப்பு தெரிவித்ததால் மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னால் அமர்ந்திருந்த இருவரும் மாதவிக்கு தொந்தரவும் கொடுத்துள்ளனர். புகார் கொடுக்கும் போது மூவரையும் எச்சரித்து விடும்படி மாதவி எங்களிடம் தெரிவித்தார். இருப்பினும் மூவரையும்  கைது செய்துள்ளோம். மூன்று பேருக்கும் எம்.ஜி.ஆர் நகர். இதில் வெங்கடேஷ், கார் டிரைவர். கைதான மருது, தன்னுடைய நண்பர்களை திருவான்மியூர் வரை அழைத்து செல்ல  மாதவியிடம்  அனுமதி கேட்ட பிறகே அவர்களை ஏற்றியதாக தெரிவித்தார். ஒவ்வொரு வரும் முரண்பாடாகவே தகவல்களைச் சொல்கின்றனர். காருக்குள் என்ன நடந்தது என்பதை மாதவி தெளிவாகச் சொன்னால் தான் இந்த வழக்கில் நடவடிக்கை  எடுக்க முடியும்"என்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.