சுட்டிகளுக்கு ஓவியம் வரைவது ரொம்பவும் பிடிக்கும். தான் வரைந்த ஓவியம், ஏதாவது ஒரு புத்தகத்தில் வெளிவந்தால், அதை நண்பர்களைப் பார்க்கவைத்து கெத்து காட்டுவார்கள். சிலர், தாங்கள் வரைந்த ஓவியங்களை ரகசியமாவே வைத்திருப்பார்கள். தங்களின் திறமையை எப்படி வெளி உலகிற்கு கொண்டுசெல்வது என்று தயங்கும் சுட்டிகளுக்காவே, புது டெக்னிக்கைக் கண்டுபிடித்துள்ளார், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஷன் டிஸைனர் ஜெய்மீ நியூபெர்ரி (Jaimee Newberry).
தாங்கள் ஆடை எப்படி வடிவமைக்க வேண்டும், அதில் என்ன டிஸைன் வரவேண்டும் என்பதை சுட்டிகளே வரைந்து கொடுக்கலாம். அவர்கள் வரைந்த டிஸைனை அப்படியே டிரெஸ்ஸில் கொண்டு வந்துவிடுகிறார். அதைப் பார்த்ததும் கையில் தந்தவுடனே அசந்துபோய், சுட்டிகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

அமெரிக்காவின், லாஸ் 'வேகஸ் நகரைச் சேர்ந்த 'ஜெய்மீ நியூபெர்ரி', சமீபத்தில், சுட்டிகளின் டிரெஸ் டிஸைன்களுக்காவே 'Wear their imagination' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். சிறுவர்கள் வரைந்து அனுப்பும் ஓவியங்கள், டிஸைன்களைத் துணி மீது அச்சிட்டு, சட்டையாக உருவாக்கி வீட்டுக்கு அனுப்பி, சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். நியூ பெர்ரிக்கு இரண்டு மகள்கள். கலர் ஸ்கெட்ச் கிடைத்தால் போதும், ஏதாவது கிறுக்கிக்கொண்டே இருப்பார்கள். அதில் கோடுகளைப் போட்டு, ஓவியங்களாக டெக்கரேட் செய்திருப்பதைப் பார்த்தபோது, 'சிறுவர்கள் வரையும் ஓவியங்களையே ஆடைகளில் டிஸைனாக மற்றினால் என்ன?" என்ற ஐடியா தோன்றியது.

மகள்கள் வரைந்த ஓவியங்களை அப்படியே துணி மீது அச்சிட்டு, அழகிய ஆடைகளாக மாற்றி மகள்களிடம் காண்பித்ததும் சந்தோஷத்தில் அப்பாவை முத்த மழையால் நனைத்துவிட்டனர். 'இதையே ஏன் நமது தொழிலாக மாற்றிக்கொள்ளக்கூடாது' என்று யோசனை வர, உடனே களத்தில் இறங்கி விட்டார். இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து இந்த நிறுவனத்திற்கு பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் வரைந்த ஓவியங்களை போட்டோ எடுத்து, நியூபெர்ரிக்கு அனுப்ப வேண்டும். அதை, ஆடையாக மாற்றி, 12 மணி நேரத்திற்குள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். இதற்காக 72 டாலர்கள் வசூலிக்கும் நியூபெர்ரி, வருங்காலங்களில் டி-ஷர்ட் முதற்கொண்டு இன்னும் பலவித டிஸைன்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
என் ஆடை: என் டிஸைனில் என சுட்டிகளும் புரட்சி போராட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.