சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து உதய்பூர் சஜ்ஜன்கார் வனஉயிரியல் பூங்காவுக்கு அண்மையில் ராமா என்ற ஆண் வெள்ளைப்புலி வழங்கப்பட்டது. ஆனால், தமிழ் மொழி மட்டுமே தெரியும் என்பதால், பராமாரிப்பாளர்கள் இடும் கட்டளையை ஏற்க மறுத்து வருகிறது ராமா புலி.
மத்திய வனவிலங்குகள் சரணாலய ஆணையத்தின் உத்தரவின் இரண்டு ஓநாய்களை வண்டலூர் அறிஞர் அண்ணா வனவிலங்குகள் சராணாலயத்துக்கு வழங்கிவிட்டு, அதற்கு பதிலாக இந்த ராமா புலி உதய்பூருக்கு வழங்கப்பட்டது. ஆனால், ராமாபுலி பிறந்ததில் இருந்தே சென்னையில் வளர்ந்து விட்டதாலும் அதன் பராமரிப்பாளர்கள் தமிழில் மட்டுமே அதற்கு கட்டளைகள் இட்டு பழக்கியதாலும், இப்போது உதயபூர் சென்று மொழி தெரியாமல் ராமா புலி தடுமாடுகிறது. அதனால், புலி பராமரிப்பாளர்கள் இடும் கட்டளைகளை புரியாமல் தவிக்கிறது.
இதனால் ஒன்று ராமா புலி மார்வாரி அல்லது ஹிந்தி மொழியை கற்க வேண்டும். இல்லையென்றால், அதன் பராமரிப்பாளர்கள் தமிழ் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.உதய்பூர் வனவிலங்குச் சரணாலயத் தலைமை வார்டனும் மாவட்ட வனச்சரணாலய அதிகாரியுமான மோகன்ராஜ் இது குறித்து கூறுகையில், ''இந்த புலியை நாங்கள் வாங்கும் போது இப்படி ஒரு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்று நினைக்கவில்லை. ஒரு தமிழ் தெரிந்த பராமரிப்பாளரை அனுப்பி வைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளோம் '' என தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு வண்டலூர் வனவிலங்கு சராணாலயத்தில் பிறந்த ராமா புலி, பிறந்ததில் இருந்தே தமிழ் கட்டளைகளுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் புலி வட இந்தியாவில் போய் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது. ராமாபுலிக்கு மொழி தெரியாவிட்டாலும், அதன் வருகை உதய்பூர் வனவிலங்கு சரணாலத்திற்கு புதிய அந்தஸ்த்தை அளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில தலைமை வனப் பாதுகாவலர் ராகுல் பட்நாசாகர் , '' உதய்பூரில் ஏற்கனவே தாமினி என்ற பெண் புலி உள்ளது. இப்போது ராமா புலியும் வந்திருப்பதால், புலிகள் இனப் பெருக்கத்திற்கு வழி வகுத்துள்ளது. இந்த வனவிலங்குகள் சரணலாயத்திற்கு தினமும் ஏராளமானோர் பார்வையிட வருகின்றனர். கடந்த வருடத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் வருகை தந்தனர். அதன் மூலம் 25 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்தது '' என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.