உலக நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியான பொருளாதார சமத்துவமற்ற நாடு என்கிற பெயரை இந்தியா பெற்றுள்ளது.
New World Wealth என்கிற ஜோஹன்னஸ்பர்கை மையமாக வைத்து இயங்கும் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பாதிக்கும் மேலான செல்வம் குறிப்பிட்ட சில கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களில் உள்ளது. தனிநபர்களின் மொத்த பொருளாதார மதிப்பாக 5600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உள்ளது என்றும் ஆனால் ஒரு இந்தியனின் சராசரி மதிப்பு மிக குறைவாக உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சதவிகிதம் எவ்வளவு உயர்ந்துள்ளதோ அந்த அளவிற்கு பொருளாதார சமத்துவமற்ற நிலை ஒரு நாட்டில் நிலவுகிறது என்று பொருளாகும். ஒரு நாட்டின் பாதிக்கும் மேலான செல்வம் ஒரு தரப்பு மக்களிடம் குவிந்துள்ளது என்றால் அங்கே நடுத்தர வர்க்கம் என்பதற்கு இடமே இல்லை என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவைப் பொறுத்தவரையில் இந்த சதவிகிதம் 62% ஆக உள்ளது. உலகிலேயே பொருளாதார சமத்துவம் அதிகம் பெற்ற நாடு என்கிற பெயரை 22% கொண்டு ஜப்பான் பெற்றுள்ளது. இந்த சதவிகிதம் அமெரிக்காவில் 32% ஆகவும் இங்கிலாந்தில் 35% ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார சமத்துவத்தை பொறுத்தவரை இதுவரை கடும் விமர்சனங்களை பெற்று வந்த அமெரிக்கா 32% பெற்றிருப்பதும் இந்தியா 54% பெற்றிப்பதும் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.