தி.மு.க, அ.தி.மு.க உள்பட பிரதான கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சிக் களத்தில் விறுவிறுப்பாக உள்ளன. நாம் தமிழர் கட்சியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. ' நாங்களும் களத்தில் இருக்கிறோம். விருப்பமுள்ளவர்களை களத்தில் இறக்கியிருக்கிறோம்' என்கிறார் சீமான்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டது அ.தி.மு.க. அடுத்தடுத்த கட்டங்களாக பட்டியலை வெளியிட்டு வருகிறது தி.மு.க. தே.மு.தி.கவிலும் பட்டியல் தயாராகி வருகிறது. மக்கள் நலக் கூட்டணியின் வார்டுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால், சட்டமன்றத் தேர்தலில், ' முதல்வர் வேட்பாளர்' என்ற அடையாளத்தோடு களமிறங்கிய சீமானின், நாம் தமிழர் கட்சியில் அதற்கான பணிகள் நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் நிலையிலும் சீமான் இல்லை.
' உள்ளாட்சியில் போட்டியிடுகிறீர்களா?' என்ற கேள்வியை சீமானிடம் கேட்டோம். " என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? அனைத்து இடத்திலும் போட்டியிட இருக்கிறோம். ' உள்ளாட்சி வார்டுகளில் மகளிர் மற்றும் எஸ்.சி. மக்களுக்கு எந்தெந்த வார்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது' என்ற தகவலை படித்து அறிவதற்கு முன்னரே, அவசரக் கதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. மறுநாளே அ.தி.மு.கவில் இருந்து அனைத்து வேட்பாளர்களையும் அறிவிக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தி.மு.க ஆட்சியில் இருந்தாலும், இதுதான் நடக்கிறது. எங்களைப் போன்ற கட்சிகளுக்கு தேர்தல் குறித்து யோசிப்பதற்குக்கூட காலஅவகாசம் வழங்கப்படவில்லை. நாங்கள் இப்போது போட்டியிடுவதே, கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகத்தான். நாட்டின் இறையாண்மையைப் பற்றிப் பேசும் தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.கவும், காவிரி தண்ணீர் நமக்குக் கிடைக்காமல் இருப்பதைத்தான் விரும்புகின்றன. அவர்கள் பேசும் இறையாண்மையைத்தான், இங்குள்ள திராவிடக் கட்சிகளும் பேசி வருகின்றன. உரிமைக்காகப் போராடுவதே நமது அன்றாட வழக்கமாகிவிட்டது. முதல்வர் உடல்நலமில்லாமல் இருக்கும் செய்தி பரவிய நேரத்தில், உள்ளாட்சித் தேர்தலையும் அறிவித்துவிட்டார்கள்.
காவிரி நீர் பிரச்னைக்காக, போராட்ட அறிவிப்பை யாரும் வெளியிடுவதற்குக்கூட வாய்ப்பு தராமல் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துவிட்டார்கள். அனைத்துக் கட்சிகளையும் தேர்தலை நோக்கி திசைதிருப்பிவிட்டார்கள். அண்மையில் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பழமையான ஐந்தாயிரம் பொருட்களைக் கண்டெடுத்திருக்கிறார்கள். அவற்றை ஆய்வு செய்வதற்கு இரண்டு ஏக்கர் நிலத்தைக்கூட தமிழக அரசு ஒதுக்கவில்லை. அந்தப் பொருட்களை மைசூருவுக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த நாட்டில் அதானிக்கெல்லாம் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் சலுகை விலையில் அளிக்கப்படுகின்றன. நம்முடைய மூதாதையர்களின் பெருமையை அறிந்து கொள்வதைக்கூட ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.
எங்களைப் பொறுத்தவரையில், மக்களிடம் நெருக்கமாகச் சென்று சேர வேண்டிய பணியில் இருக்கிறோம். நாங்கள் செய்வது மட்டும்தான் உண்மையான புரட்சி. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அவரவர்களுக்கான சாலையில் அவரவர்தான் ஓட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மற்ற கட்சிகளைப் போல விருப்பமனு வாங்குகிறோம் என நாங்கள் அறிவிக்கவில்லை. இப்படியொரு சடங்கு எதற்கு? கட்சியில் உண்மையாக உழைப்பவர் யார் என்று மாவட்ட நிர்வாகிகளுக்குத் தெரியும். அவர்களுக்கு வார்டுகளைக் கொடுத்து போட்டியிடச் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன செய்வது?" என்றார் நிதானமாக.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.