தண்ணீர் என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அது அனைவருக்கும் பொதுவானது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
காவிரி பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்-புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.
இந்நிலையில், இதே கோரிக்கைக்காக தே.மு.தி.க. சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலக வளாகத்தில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
பிரேமலதா விஜயகாந்த் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசும்போது, ''தமிழர்களுக்கு எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் முதலில் குரல் கொடுக்கும் தலைவர் விஜயகாந்த். ஒட்டு மொத்த தமிழர்களின் நலனில் அவருக்கு அக்கறை உண்டு. கர்நாடகாவை கண்டித்து முதலில் உண்ணாவிரதத்தை அறிவித்தவர் விஜயகாந்த் தான்.
கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக-தமிழகம் இடையே காவிரி நதிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண நதிகளை தேசியமயமாக்க வேண்டும். கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்கள் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தராததால், வறட்சி ஏற்பட்டுள்ளது. சம்பா, குறுவை நெல் சாகுபடி நடைபெறவில்லை, விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தண்ணீர் என்பது ஒருவருக்கு சொந்தமானது அல்ல, அது அனைவருக்கும் பொதுவானது. காவிரி பிரச்னையில் எப்போது தீர்வு கிடைக்கும் என ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்த்துள்ளான். இப்போதுகூட, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்காவிட்டால், கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டிருக்காது. கர்நாடகாவில் தமிழர்கள் வன்முறை கும்பலால் தாக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அறவழியில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வினர் உண்ணவிரதம் இருந்து வருகின்றனர். தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த கூடிய போராட்டம்தான் இது.
கடந்த ஒரு சில நாட்களாக சேலம், ஆத்தூர் பகுதியில் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. வெளியில் உணவு சாப்பிட்டதால் வயிற்று கோளாறும், காய்ச்சலும் ஏற்பட்டது.
அவர் இன்று உண்ணாவிரதம் இருந்தால், உடல் நலம் மேலும் பாதிப்படையும். ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளதால், அவரால் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.