Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

ஓய்வு பெறும் வீராங்கனை 'ரோமா', பராமரிக்க அன்பான உரிமையாளர்கள் தேவை!


மனிதர்கள் போல, விலங்குகள்கூட நாம் எவ்வாறு வளர்க்கிறோமோ அப்படிப்பட்ட அணுகுமுறையையே நம்மிடம் வெளிப்படுத்தும் தன்மையை உடையவை. ஒரு விலங்கின் மீது அன்பை காட்டி, பாசமாக பேசி வளர்த்தால், அது நம் மீது பாசத்தைப் பொழிந்து நம் செல்லப்பிராணியாக இருக்கும். கல்லை தூக்கி அதன் மேல் அடித்து துன்புருத்த நினைத்தால், அது நம்மை பார்க்கும் போதெல்லாம் கோபத்துடன் துரத்தத் தான் செய்யும். அதே போல், காவல் துறைக்காக பயிற்சி அளித்தால் தனது மோப்பச் சக்தியின் உச்சக்கட்ட பயன்பாட்டை தொட்டு அவர்களுக்கு உதவும். அப்படிப்பட்ட நாய் தான், சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வந்த ரோமா.

2011-ம் ஆண்டு ஜூலை மாதம். அமெரிக்க நாட்டின் செயலாளரான ஹிலாரி கிளிண்டன், சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவருடைய பாதுகாப்புப் படையின் முக்கிய அங்கம் ஒரு டால்மேஷன் வகை நாய்ப் படை. விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் ஹிலாரியை வரவேற்க, டால்மேஷன் நாய்ப்படையை வரவேற்றது சென்னை விமான நிலையப் பாதுகாப்பு படையின் ரோமா என்கிற பெண் நாய்.

அப்போது அதன் வயது ஐந்து. லேப்ரடார் ரெட்ரீவர் வகையை சேர்ந்த அந்த நாய், ஹிலாரிக்காக சோதனை செய்து பாதுகாப்பை உறுதிச் செய்தது.



''ஹிலாரியின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வாகனங்களின் அடியிலெல்லாம் சென்று சோதனை செய்தது ரோமா. ரோமாவின் திறமையான சோதனை முறையைப் பார்த்து, ஹிலாரியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி, நாய்ப் படையை நிறுத்தி வைத்துவிட்டு ரோமாவின் சேவையை முழுதும் நம்பினார். மேலும், மோப்ப நாயாக இருந்தபோது, பல மணி நேரங்கள் தொடர்ந்து வேலை செய்தபோதும் கூட ரோமாவின் உடல் ஆரோக்கியம் சிறிதும் குறையவில்லை. பத்து வயது ஆனது போலவே தெரியவில்லை", என்று பெருமிதம் கொள்கிறார் குண்டு கண்டறிதல் மற்றும் அகற்றல் அணிச் சேவையை சேர்ந்த கிரிஷா.

தற்போது பத்து வயதான ரோமா, தன் சோதனை பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது. இந்திய விமான சோதனைப் படையில் சேர்வதற்கு முன்னால், இந்திய ராணுவத்தில் பணியாற்றியது ரோமா. மேலும், சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களில் நடத்தப்பட்ட நாய் நிகழ்ச்சிகளிலும் ரோமா பங்கேற்றுள்ளது.

"ரோமாவின் உடல் ஆரோக்கியமும், மூளை செயல்பாடும் அற்புதமான நிலையில் உள்ளன. தடுப்பூசிகள் முழுதும் பெற்ற நாய் ரோமா.", என்றார் விமான சோதனைப் படையின் மேலாளரான சுரேஷ் ராஜ் குமார். ரோமாவை தத்தெடுக்க நினைப்பவர்கள் சுரேஷை 9444813214 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.