நெல்லையில் குடும்ப தகராறு காரணமாக தாயின் கண் எதிரிலேயே, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய யூ.கே.ஜி சிறுவனை வெட்டிப் படுகொலை செய்த கொடூரம் அரங்கேறி உள்ளது.
நெல்லை புறநகர் பகுதியான பேட்டை சுந்தரநயினார் கோவிலை சேர்ந்தவர், இசக்கியப்பன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமாவும் மகன் தருண் மாதவ் (5), மகள் கல்பனா (12) ஆகியோர் வசித்து வந்தனர். தருண் மாதவ் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வந்தான். வீட்டுக்கு அருகிலேயே அந்த பள்ளி அமைந்துள்ளதால், இன்று பள்ளி முடிந்ததும் அவனை அழைத்துக் கொண்டு பிரேமா வந்து கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே வந்தபோது, குடிபோதையில் அங்கு நின்று கொண்டிருந்த ஆறுமுகம் என்ற இளைஞர், மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து பச்சிளம் பாலகன் என்று கூட பார்க்காமல் சிறுவன் தருண் மாதவை சரமாரியாக வெட்டத் தொடங்கினார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத பிரேமா தன் கண் எதிரிலேயே மகனுக்கு வெட்டு விடுவதை பார்த்ததும் அலறித் துடித்து பாய்ந்து சென்று அவனை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால், அதற்குள் சிறுவனுக்கு சரமாரியாக வெட்டு விழுந்ததால் அவன் சுருண்டு விழுந்தான்.
மகனுக்கு வெட்டு விழாமல் தடுத்தபோது பிரேமாவுக்கும் வெட்டு விழுந்ததில் காயமடைந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், இருவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் தருண் மாதவுக்கு ஆழமான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு இருந்ததால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். பிரேமாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுவனை வெட்டிப் படுகொலை செய்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை பிடிக்க அப்பகுதியினர் முயற்சித்தனர். ஆனால், அறிவாளைக் காட்டி மிரட்டியபடி அவன் அங்கிருந்து தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை விரட்டினர். அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த ஆறுமுகம் அவசரமாக தப்பி ஓடும்போது வழியில் இருந்த விளக்குக் கம்பத்தில் மோதி கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கொடூரமான இந்த கொலையைச் செய்த ஆறுமுகம், உயிரிழந்த சிறுவன் தருண் மாதவ்வின் தந்தை இசக்கியப்பனின் உறவினர் ஆவார். இவருக்கு கலா என்பவரை பிரேமா ஏற்பாட்டில் திருமணம் செய்து வைத்து உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆறுமுகத்துக்கு குழந்தை பிறந்துள்ளது. குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததால் ஆறுமுகத்தின் மனைவி கலா, கணவனிடம் கோவித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், தனக்கு கலாவை இவர்கள் திருமணம் செய்து வைத்து மோசம் செய்து விட்டதாக அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.
தனது குழந்தையுடன் மனைவி சொந்த வீட்டுக்கு சென்று விட்டநிலையில், இவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்காமல் இசக்கியப்பனின் குழந்தையை கொலை செய்துள்ள விவரம் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகாயமடைந்த பிரேமா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பத் தகராறில் பழி வாங்க பச்சிளம் பாலகனை தாயின் கண் எதிரிலேயே அறிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.