சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் திறந்துவிடப்படாததால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ' பிரதமரை சந்திக்க அனுமதி கடிதம் கொடுத்தும், வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார் மோடி. உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கும் செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது' என வேதனைப்படுகின்றனர் தமிழக விவசாயிகள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வந்து சேர வேண்டிய காவிரி நீரை, இன்னமும் திறந்துவிட வில்லை கர்நாடக அரசு. இதனால் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடந்து வந்த சம்பா சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டன. உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த காவிரி வழக்கு விசாரணையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, ' காவிரி நீரை, பற்றாக்குறை காலத்தில் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக நடுவர் மன்றம் விரிவாக விவரித்துள்ளது. காவிரி நீரைத் திறந்துவிட வேண்டிய அவசியம் கர்நாடகாவிற்கு உள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா அரசு ஏன் செயல்படுத்தக் கூடாது? பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உதவ வேண்டியது கர்நாடக அரசின் கடமை. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு ஏன் காவிரி நீரை திறந்துவிடவில்லை? இரு மாநில மக்களின் ஒற்றுமை மிக அவசியம். காவிரியில் தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு எவ்வளவு நீரை திறந்துவிட முடியும் என்ற விவரத்தை திங்கள்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என தெரிவித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் விவசாய சங்க பிரதிநிதி ஒருவர், "தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 193 டி.எம்.சி காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதை முறைப்படி வழங்குவதற்கு கர்நாடக அரசுக்கு விருப்பமில்லை. கடந்த ஆண்டு 35 டி.எம்.சி நீரையும் இந்த 27 டி.எம்.சி நீரையும் தராமல் நிலுவை வைத்திருக்கிறது கர்நாடகா. இதனால், மேட்டூர் அணைக்குப் போதுமான நீர்வரத்து இல்லாததால், ஜூன் மாத குறுவை நெல் சாகுபடி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. சம்பா பருவ சாகுபடிக்கும் அணை திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில், ஒருபோக சாகுபடிக்கே வழியில்லாத சூழல் உருவாகிவிட்டது. தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன" என வேதனைப்பட்டார்.
விவசாயிகளின் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண்பது குறித்து, கடந்த 27-ம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவது என விவசாய சங்கங்கள் முடிவெடுத்தன. இதன்படி பிரதமரை சந்திப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டன. இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம். " கடந்தாண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் காவிரி நீர் நமக்கு வந்து சேர்ந்தது. வரலாற்றிலேயே முதன்முறையாக செப்டம்பர் மாதம் தொடங்கியும், தண்ணீர் வந்து சேரவில்லை. பம்ப் செட் மூலம் சாகுபடி செய்த விவசாயிகள் ஓரளவு தப்பித்துவிட்டனர். காவிரியை நம்பியே விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி என்பது இரண்டு மாநிலங்களுக்கும் உள்ள பொதுவான உரிமை என்பதை கர்நாடகா அரசு மறந்துவிட்டது. காலம் தாழ்த்திய நீர் வரத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இதுகுறித்து ஆட்சியாளர்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு முதல்வரின் கடமை முடிந்துவிட்டதாக தமிழக அரசு நினைக்கிறது. 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பொய்த்துப் போனது குறித்து யாரும் கவலைப்படவில்லை. காவிரி நீரை முழுமையாகப் பயன்படுத்தி, கர்நாடகத்தில் விவசாயப் பணிகளைப் பூர்த்தி செய்துவிட்டனர். இதற்கு மேல் காவிரி நீர் திறந்துவிட்டால், வடகிழக்குப் பருவமழையோடு சேர்ந்து இன்னும் அதிக பாதிப்புகளுக்கு விவசாயிகள் ஆளாக நேரிடும். ஒருவேளை நீர் திறந்துவிட்டாலும், தெளிப்பு நீர் சாகுபடிக்கு எதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆலோசித்து வருகிறோம்" என்றவர், "அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு முடிவின்படி பிரதமர் மோடியை சந்திக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.ராஜா கடிதம் கொடுத்திருந்தார். சி.பி.எம் கட்சியின் எம்.பி டி.கே.ரங்கராஜனும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பேசினார். இதற்குப் பதில் அளித்த பிரதமர் அலுவலகம், ' இன்று வியட்நாம் செல்கிறார் பிரதமர். 7-ம் தேதிக்குப் பிறகு சொல்கிறோம்' எனப் பதில் அளித்துள்ளது. இந்த ஆண்டு சம்பா சாகுபடி பொய்த்துப் போனது குறித்து, ஆட்சியாளர்களுக்கு எந்தவித கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை" என்றார் கொந்தளிப்போடு.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.