எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே,என்ற அச்சத்தில் அவைக்கு அமைச்சர்கள் குறிப்பெடுத்து வந்த காலம் மாறி , சட்டசபைக்கு வரும்போதே, முதல்வரை எப்படி புகழ்வது என்று நோட்ஸ் எடுத்த வரும் நிலை தான் இன்றைய சட்டமன்றத்தின் நிலையாக உள்ளது.
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (2-ந்தேதி) முடிவடைகிறது. கடைசி மானியக்கோரிக்கையாக வருவாய்த்துறையின் மானியக்கோரிக்கை இன்று சட்டசபையில் நடைபெற்றது. தொடர் ஓட்டத்தில் ஓடுபவர்கள் கடைசி சுற்றில் காட்டும் வேகத்தை போல, சட்டமன்றத்தில் இறுதி நாளில் பேச வாய்ப்பு கிடைத்தவர்களும் முதல்வரின் குட் புக்கில் இடம் பிடிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன்
வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீது பேசிய முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தோப்பு வெங்கடாச்சலம், தனது பேச்சை துவக்கியது முதல் இறுதிவரை, துறை பற்றிய விஷயங்களை விட முதல்வரை புகழ்ந்த வார்த்தைகள் தான் அதிகம். அவர் பேச்சின் சில சுவராஸ்யங்கள்.
“ இங்கிலாந்தை செம்மைப்படுத்திய தாட்சர் போல, சிங்கப்பூரை உருவாக்கிய லி குவான் யூ போல, மலேசியாவை மேம்படுத்திய மகாதிர் போல, தமிழகத்தை வளப்படுத்தியவர் புரட்சித் தலைவி அம்மா!” என்று துவக்கியவர், திடீர் என “ புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக ,தோழா ஏழை நமக்காக” என்று ராகமாக பாடினார். அதற்கு அவர் சொன்ன விளக்கம்தான் ஹைலைட். புத்தனின் ஞானமும், ஏசுவின் கருணையும், காந்தியின் துாய உள்ளம் என்ற மூன்றையும் ஒருங்கே கொண்டவர் எங்கள் அம்மா” என்று ஒரே போடாக போட்டார். தொடரந்து ஜெ.வைப் பற்றி புகழ்மாலை வாசித்து கொண்டே இருந்தவர், தான் பேசவந்த மானியக்கோரிக்கையைப் பற்றி எதுவும் பேசாமல் இதையே பேசிக்கொண்டிருந்ததால், எதிர்க்கட்சியினர் டென்ஷனாகிவிட்டார்கள்.

“அவர் துறை சம்பந்தமாக எதையும் பேசவில்லை” என்று அவர்கள் கூச்சலிட, அதற்கு “ நான் இதைபேசிவிட்டு துறையைப் பற்றி பேசுவேன்” என்று சொன்னவர் தொடர்ந்து எம்.ஜி.ஆர் பாடல்களின் வரிகளைப் பாடி அசரடித்தார். சட்டசபையில் இப்போது, பாட்டு பாடும் கலாச்சாரம் பெருகி வருவதும், அ.தி.மு.க வினர் முதல்வரை புகழ்ந்து பாடுவதை இப்போது வழக்கமாக்கி வருகின்றனர்.
இதேபோல் முன்பு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடி பாட்டுமன்றமாக்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.