காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், ராமேஸ்வரத்தில் தரிசனத்துக்கு வந்த கர்நாடகா பக்தர்களை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று, தரிசனத்து அழைத்து சென்று பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் கர்நாடகாவில் பெரும் கலவரம் வெடித்த நிலையில், தமிழகத்திலும் சில இடங்களில் கர்நாடக வாகனங்கள் தாக்கப்பட்டன. அதன்படி ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் ராமேஸ்வரத்தில் பேருந்து நிலையங்கள், பார்க்கிங் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் பதற்றம் நிலவியது. இதை தடுக்கும் வகையிலும், காவிரி பிரச்னையில் இரு மாநிலங்களிலும் நிலவும் வன்முறை மற்றும் அசாதாரண சூழலை மாற்றி அமைதி ஏற்படுத்தும் வகையிலும் ராமேஸ்வரம் வந்த கர்நாடக பக்தர்களுக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்து மக்கள் கட்சியினர் கர்நாடகா பக்தர்களை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்று, கோவிலுக்கு அழைத்துச்சென்று சுவாமி தரிசனம் செய்துவைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் பூர்ண கும்ப மரியாதையுடன் கர்நாடாக பக்தர்களை வரவேற்று பாதுகாப்புடன் அனுப்பி வைப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தமிழக பதிவு எண் வாகனங்களை பார்த்தாலே அடித்து உடைக்கப்படும் நிலையில், ஒற்றுமையை கற்பிக்கும் வகையில், கர்நாடக பக்தர்களுக்கு வரவேற்பும், பாதுகாப்பும் அளித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.