ஒரு நிறுவனம், `வேலைக்கு ஆட்கள் தேவை’ என்று அறிவித்தது. நிறைய பேர் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.
அனைவரையும் ஒர் அரங்கத்தில் உட்கார வைத்தார்கள். வினாத்தாள்களும், விடைத்தாள்களும் வழங்கப்பட்டன.
நிறுவனத்தின் மேலாளர் சொன்னார்... ``இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளன. உங்களுக்கு ஐந்து நிமிடம் ஒதுக்கப்படும். அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்.’’
நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேக வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின், விடைத்தாள்களை வாங்கினார் மேலாளர்.
அப்போது நேர்காணலில் கலந்துகொண்டவர்கள், ``நேரம் குறைவாகக் கொடுத்துவிட்டீர்கள், அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை’’ என்றனர். அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதாமல் வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.
அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார்... ‘‘விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டுக்குச் செல்லலாம்!’’ அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்.
``வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள்?’’ என்று கேட்டனர்.
அதற்கு அந்த மேலாளர், ``எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியைப் படித்துப் பாருங்கள்’’ என்றார். படித்துப் பார்த்துவிட்டு எதுவும் பேச முடியாமல் கிளம்பிச் சென்றனர். அந்தப் பத்தாவது கேள்வி இதுதான்...
10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம்.........
இது சிந்திக்க வேண்டிய விஷயம். இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை கிடைத்திருக்கும் அல்லவா?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.