Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 29, 2016

மதிப்புக்குரிய ஆண்களே... நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!


‘பொதுவாக பெண்கள்தான் அதிகமா பொறாமைப்படுவாங்க’ என்று பலகாலமாகவே ஒரு கருத்து நிலவிக் கொண்டிருக்கிறது இங்கே. ஆனால், அக்கருத்தை இப்போது கொஞ்சம் மாற்றிக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆம், ஆண்களில் பலரிடமும் அதீத பொறாமைக் குணம் உண்டு. அது தற்போது வேகவேகமாக வெடித்து வீதிக்கு வந்துவிட்டது. யார் மேல் பொறாமை எனக் கேட்கிறீர்களா? சாய்ஸே தேடவேண்டாம்... பெண்கள் மீதுதான். அதுவும் இப்போதைய நவீன பெண்களின் மீது எக்கச்சக்கப் பொறாமை இருக்கதான் செய்கிறது ஆண்கள் பலருக்கும்.

‘பொறாமை இருந்தா, இருந்துட்டு போகுது. இதெல்லாம் ஒரு விஷயமா’ என்கிறீர்களா? ஆனால், இன்றைக்கு நடக்கும் சமூக வன்முறைகளுக்கு இந்தப் பொறாமை உணர்வும் முக்கிய காரணம் என்பதுதானே பிரச்னை! பொறாமை எண்ணம் ஒரு பார்வையோடு மறைந்தால் பராவயில்லை. ஆனால், பெண்களின் உயிர்களை அல்லவா உருவி எடுக்கின்றது.

ஆண்கள் மனதில் உதிக்கும் இத்தகைகய அதீத பொறாமைக் குணத்தின் உளவியல் சிக்கல்கள் குறித்து பேசுகிறார் மனநல ஆலோசகர் ராஜ மீனாட்சி..

“பொதுவாக ஆண்கள் பலருக்கும் அழகான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி இருக்கும். ஒருவேளை அவர்களின் பார்வையில், அழகு குறைந்த பெண் ஒருத்தி மனைவியாக வாய்த்துவிட்டால், திருமணத்துக்கு பிறகு கணவனுக்கு தாழ்வுமனப்பான்மை உண்டாகும். அது நாளடைவில் வளர்ந்து, மனைவியின் மேல் கோபமாக மாறி, பின் சந்தேகமாக உருப்பெற்றிருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் தன்னைவிட எளிமையாக நல்ல முடிவுகளைச் சொல்ல கூடிய பெண்களை எல்லாம், நான்கு பேர் முன்னால் பேச விடமாட்டார்கள் பல ஆண்கள். ‘உனக்கு ஒன்றும் தெரியாது’ எனச் சொல்லி அதட்டி வைப்பார்கள்.

 



தன்னை விட அதிகம் படித்து இருக்கும் பெண்களை, திருமணம் செய்துகொள்ளத் தயங்கும் ஆண்கள் இங்கே அதிகம். தன்னைவிட கூடுதலாக சம்பளம் வாங்கும் பெண், தன்னைவிட உயரிய வேலையில் இருக்கும் பெண் இவர்களை எல்லாம் திருமணம் செய்துகொள்ள ஆண்கள் பலரும் தயங்குவார்கள், தவிர்ப்பார்கள். ஒருவேளை திருமணம் செய்து கொள்ள நினைத்தாலும், திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகக்கூடாது என்று நிபந்தனை விதிப்பார்கள். காலகாலமாக சமையலறையைத் தாண்டாத பெண்கள், இன்று சகல துறைகளிலும் சாதிப்பது, பெரும்பாலான ஆண்களுக்கு வியப்பாகவும்... வேதனையாகவும் இருக்கிறது.



 ஒரு பெண், தன்னை வேண்டாம் என மறுக்கும்போது, முதலில் அந்த ஆணுக்கு வருவதும் தாழ்வுமனப்பான்மையே. அதன் வெளிப்பாடுதான், பல வடிவங்களில் வெடிக்கிறது. பெண்ணின் நடத்தையைத் தவறாக பேசுவது எல்லாம் இதன் உச்சக்கட்ட வெளிப்பாடுகளே!

எல்லா ஆண்களுமே இப்படித்தான் என்று ஒரேயடியாக முடிவு கட்டிவிடக்கூடாது. விதிவிலக்குகளும் இங்கே இருக்கிறார்கள்.

1) உங்களைவிட கூடுதலாகப் படித்திருக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களின் மீது கோபம் கொள்ளாமல் இருப்பீர்களா?

2) உங்களைவிட அதிக சம்பளம் வாங்கும், உயர் பதவியில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதில் எந்தத் தயக்கமும் கொள்ளாமாட்டீர்கள்தானே?

3) காதல், திருமண வாழ்க்கையில் பெண்ணின் முடிவுகளுக்கு மதிப்பளிப்பீர்களா?

அடிப்படையான இந்த மூன்று கேள்விகளுக்கும் ‘ஆம்‘ என்ற பதில் அளிக்கும் ஆண்கள்தான் அந்த விதிவிலக்குகள்.

பென்களைப் பற்றிய சரியான புரிதலோடு வளர்ந்தவர்களால்தான் இந்தக் கேள்விகளுக்கு சற்றும் தயங்காமல் Ôஆம்Õ என்று பதில் அளிக்க முடியும். இத்தகைய ஆண்கள்தான் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்க மாட்டார்கள்.

வீட்டில் பிள்ளைகள் முன் அம்மாவை தாழ்த்தி பேசும் அப்பாக்களைப் பார்த்து வளரும் பெரும்பாலான பிள்ளைகளுக்கு அம்மாவின் மேல் இரக்கமும், பெண்கள் என்றால் இவ்வளவுதான் என்கிற இளக்கார எண்ணமும் தோன்றும். மேலும், தன் மனைவியை இப்படி நடத்துவதுதான் ‘ஆண்மை’ என்கிற விதையும் அவர்களுக்குள் விழும். இந்தப் பிள்ளைதான் வளர்ந்ததும், Ôபெண்களை ஆளப்பிறந்தவர்கள் ஆண்கள். பெண்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் மேல் எந்த வன்முறையும் நாம் செய்யாலாம்Õ என்ற எண்ணம் கொண்டவர்களாக மாறுகின்றனர்.

தன்னைவிட அறிவாக, திறமையாக முன்னேறும் பெண்களைப் பார்க்கும் போது, அவனுக்கு கோபம் வருகிறது. அதைக் கையாள தெரியாமல் தவறான முறையில் அந்தப் பெண்ணின் மீது நேரடியாக, மறைமுகமாகவும் வன்முறையைச் செல்லுத்துகிறான். சிலர், தன்னைத் தானே வருத்திக்கொள்கிறார்கள்.

பெண்ணும் இந்தப் பூவுலகில் ஆணைப் போல சக உயிர். அவளும் ஆளப் பிறந்தவள்தான்; சாதிக்க தெரிந்தவள்; காலத்துக்கு ஏற்றார் போல மனப்பான்மையை மாற்றிக்கொள்ளாதவர்கள்.. கால ஓட்டத்தில் மறைந்து போவார்கள். பெண்களை, வாழ்க்கைப் பயணத்தில் சகபயணியாக உணர்வோம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.