Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 28, 2016

அப்போலோவில் அரசாங்க ஃபைல்கள்!- போட்டு உடைக்கிறார் நாஞ்சில் சம்பத்...!


சென்னை அப்போலா மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா  ஐந்தாம் நாளாக  தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கலும் நேற்று துவங்கியது.

வேட்புமனு தாக்கல் துவங்கியது முதல் தினத்தன்றே ஆளும்கட்சியான அ.தி.மு.க, தனது வேட்பாளர்கள் பட்டியலை  வெளியிட்டு தேர்தல் ரேசில் முந்திக்கொண்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதால்,ஜெயலலிதாவிற்கு தெரியாமல் பட்டியல் வெளியானது என அ.தி.மு.கவினர் மத்தியில் திடீர் சர்ச்சை எழுந்தது.

“முதல்வர்,  மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக இருக்கும்போது, வேட்பாளர் பட்டியலை யார் உறுதி செய்தது?” என்ற கேள்வி அ.தி.மு.கவினர் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் அப்போலா மருத்துவமனையில் முதல்வரை சந்தித்துவிட்டு வந்த அ.தி.மு.க வின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், “உள்ளாட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்கள், எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை அம்மா அவர்கள் அறிவித்துவிட்டார்கள். இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். காவேரி தண்ணீர் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தில்  தொடுத்திருக்கிற வழக்கில் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் பிரமாண வாக்குமூலம் செய்துள்ளோம். அரியலுார் அருகே விபத்தில் இறந்தவர்களுக்கு அம்மா அவர்கள் நிதி உதவி அளித்துள்ளார்கள். எனவே கட்சிப் பணியையும், ஆட்சிப் பணியையும் மருத்துமனையில் இருந்தே அம்மா செய்துகொண்டுள்ளார்கள். அவர்களின் உடல் நிலையும் சீராக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் அம்மா பத்திரமாக உள்ளார்கள். அம்மாவின் கண்காணிப்பில் தமிழகம் பத்திரமாக உள்ளது” என்றார்.



அ.தி.மு.க வின் வேட்பாளர் பட்டியல் ஜெ.வின் ஒப்புதலோடு தான் வெளியானது, என்பதை தான் நாஞ்சில் சம்பந்த மூலம் அ.தி.மு.க தலைமை தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் இருந்துகொண்டே அனைத்துப் பணிகளையும் முதல்வர் செய்து வருகிறார் என்பதை தெரிவிக்க தான் நாஞ்சில் சம்பந்தை வைத்து இந்த கருத்தை வெளியிட வைத்துள்ளார்கள் என்கின்றார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.