தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஆட்டோ, தனியார் பேருந்துகள், லாரிகள் ஓடவில்லை, அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
காவிரி பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்-புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.

மேலும், வியாபாரிகள் கடை அடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகளும், 4½ லட்சம் மினிவேன்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என 11½ லட்சம் வாகனங்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆம்னி பஸ்களும் பகலில் இயக்கப்படாது என்று அறிவித்து உள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் 4 ஆயிரத்து 800 பெட்ரோல்- டீசல் நிலையங்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆட்டோ-டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆட்டோக்கள் ஓடாது என்று சில சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். ஆட்டோக்கள், தனியார் வேன்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் தனியார் பள்ளிகள் செயல்படாது என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது. ஆனால் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்து உள்ளது.
கடை அடைப்பு போராட்டத்தின்போது தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல், அமைதியான முறையில் நடைபெறுவதற்காக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக டி.ஜி.பி. தலைமையிலான போலீசார் எடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு தயாராக ஏராளமான போலீஸ் வேன்களும், மாநகர பேருந்துகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின் போர்வையில் கலவரத்தில் ஈடுபட்டால் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும், குறிப்பாக சென்னை சென்டிரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளுக்கோ, ரயில்வேக்கு சொந்தமான பொருட்களுக்கோ சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிர பகுதிகளில் இன்று காலை முதல் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளன. ஆட்டோக்கள், தனியார் பேருந்து, லாரிகள் இயக்கப்படவில்லை. கடை அடைப்பு போராட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்ற உத்தரவு இருப்பதால் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படுகின்றன. தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., உள்பட தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துபோதும், அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

மின்சார ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டுவதால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகின்றனர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற போலீசாரின் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், சாலையில் செல்லும் அனைத்து வாகனங்கள், திறந்திருக்கும் கடைகள், தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், செயல்படும். மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
புதுச்சேரி...
புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. அரியாங்குப்பத்தில், புதுச்சேரி-கடலூர் சாலையில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயை அணைக்க முயன்ற காவலர் அய்யனார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல்...
தூத்துக்குடி மற்றும் ஈரோட்டில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. ஆனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல், திண்டுக்கல்லில் அரசு, தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயங்குகின்றன. பள்ளிகளும் திறந்திருக்கின்றன.
திருச்சி...
முழு கடையடைப்பையொட்டி திருச்சி தில்லைநகர், மெயின்கார்டுகேட் பகுதிகளில் டீக்கடைகள் உள்ளிட்ட 99% கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சில பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் முரணான அறிவிப்பால் பள்ளி செல்லும் குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
கடலூர்...
கடலூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டவில்லை. பண்ருட்டியில் அரசு பேருந்துகள் இயங்குகின்றன. டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள் மட்டும் ஒருசில இடங்களில் திறந்துள்ளன. ஆட்டோக்கள், வாடகைக்கார்கள், லாரிகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
வேலூர்...
வேலூர் மாவட்டத்தில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், ஒருசில தனியார் பள்ளிகள் மற்றும் சில நிறுவனங்கள் இயங்குகின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.