Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 24, 2016

டெல்லியில் நடக்கும் பாலியல் தொழிலில் மத்திய அமைச்சருக்கு தொடர்பு! - மகளிர் ஆணைய தலைவி பரபர குற்றச்சாட்டு!


டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இதுவரையில் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ.க-வுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே டெல்லியில் நடக்கும் அதிகார யுத்தத்தின் வெளிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரு புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகளிர் ஆணையத்தின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஸ்வாதி மாலிவால் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரு தினங்களுக்கு முன் கெஜ்ரிவால், தன்னைப் பழிவாங்கும் நோக்கோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, இதுகுறித்து விவாதிப்பதற்காக டெல்லி சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டவுள்ளதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையினர், 'வழக்கில் கெஜ்ரிவால் சேர்க்கப்படவில்லை' என விளக்கமளித்தனர்.



இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த ஸ்வாதி ஒரு பகீர் குற்றச்சாட்டினைக் கூறினார். "டெல்லியில் விபசாரத் தொழிலுக்குப் பெயர் போன ஜி.பி ரோட்டில் சில வாரங்களாக சோதனை மேற்கொண்டு வந்தேன். பாராளுமன்றத்தில் இருந்து சுமார் மூன்று கி.மீ தொலைவிலேயே இருக்கும் இந்த இடத்தில் இப்படி ஒரு தொழிலை எப்படி செய்து வருகின்றனர்? என்று விசாரணை மேற்கொண்டேன். அப்போது, மத்திய அமைச்சர் ஒருவரும், ஒரு தேசியக் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவரும் இத்தொழிலுக்கு உடந்தையாக இருப்பது தெரிந்தது. அவர்களின் பெயர்களை வெகு விரைவில் அறிவிப்பேன். ஜி.பி ரோட்டில் நடைபெறும் இத்தொழில் மூலம் ஒரு இரவில் குறைந்தது ஐந்து கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது" என்றார்.

இதனாலேயே தன் மீது பொய்க் குற்றச்சாட்டின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மிரட்டல்கள் வருவதாகவும், மேலும் தன்னை பதிவியிலிருந்து காலி செய்து கைது செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் தெரிவித்தார். இம்மாதம்தான் டெல்லி போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தி அங்கு விபசாரத் தொழில் நடத்தி வந்த ஒரு தம்பதி உட்பட ஆறு பேரை கைது செய்தனர். அப்போது அந்த தம்பதி இருபது ஆண்டுகளாக இத்தொழிலில் சுமார் 5,000 பெண்களை ஈடுபடுத்தி 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேர்த்துள்ளதாக தெரியவந்தது. இப்போது அத்தொழிலில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டிருப்பதாக மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு வைத்துள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.