பழைய வண்ணாரப் பேட்டை என்.என்.கார்டன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி, ஊர்க்காவல் படை காவலர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பழைய வண்ணாரப் பேட்டை என்.என்.கார்டன், காளிங்கராயன் தெரு சந்திப்பில், வண்ணாரப் பேட்டை மற்றும் ராயபுரம் காவல்நிலைய போலீசார் இணைந்து நள்ளிரவில் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல், நேற்று நள்ளிரவும் அவர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, டூரிஸ்ட் போர்டு போட்ட (டி.என்.-03-எம்-4846) சைலோ வெள்ளை நிற கார் ஒன்று அவ்வழியாக வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர்.

சேதமடைந்த கார்
ஆனால், அந்தக் காரை ஓட்டி வந்த ஆசாமி, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் மீது காரை மோதி இருக்கிறார். இதில் சேகரன், அங்கிருந்த ஒரு மெடிக்கல் ஷாப் மீது தூக்கி வீசப்பட்டிருக்கிறார். பலத்த காயத்துடன் சாய்ந்த சேகரனை காப்பாற்ற, அங்கிருந்த ஊர்க்காவல் படை காவலர் தென்னரசன் ஓடி வந்திருக்கிறார். அவர் மீதும் காரை மோதி இருக்கிறார் காரை ஓட்டி வந்த மர்ம ஆசாமி. இந்த சம்பவம் நடந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால், மக்கள் திரண்டு வந்து அந்தக் காரை மடக்க முயன்றுள்ளனர்.
அந்த நேரத்தில், இன்டியா லேண்ட் கார்கோ என்கிற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காரில், அதன் ஊழியர்களை இறக்கிவிட்ட பின் அந்த நிறுவனத்தின் செக்யூரிட்டி தமிழ்ச்செல்வனும், கார் டிரைவரும் அங்கே கீழே நின்றிருந்திருக்கிறார்கள். அப்போது, போலீசாரை மோதித் தள்ளிவிட்டு வந்து கொண்டிருந்த கார், அங்கு நின்றிருந்த அந்த நிறுவனத்தின் இன்டிகா கார் மீதும் வேகமாக மோதி இருக்கிறது. இதில், இன்டிகா கார் சாலையில் இழுத்து செல்லப்பட்டு அங்கிருந்த ஒரு சுவற்றில் மோதி நின்றிருக்கிறது.

போலீசார் விசாரணை
அப்போது, இந்த சம்பவத்தை பார்த்து பதறி சாலையில் ஒதுங்கிய எம்.சி.சாலையைச் சேர்ந்த சிறுவர்கள் மீதும் அந்த கார் மோதிவிட்டு நிற்காமல் பறந்து சென்றிருக்கிறது. இதில், திவ்யா (13) என்ற சிறுமி பலத்த காயமடைந்தாள். உடனடியாக அவளை அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்கு பொதுமக்கள் தூக்கிச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமி திவ்யா, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதேபோல், படுகாயம் அடைந்த போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சேகரன், ஊர்க்காவல் படை காவலர் தென்னரசன் ஆகியோரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் உயரதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர், காவலர், சிறுமி மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்து சென்ற கார் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊர்க்காவல் படை காவலர் தென்னரசன்
இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறும்போது, ''அந்தக் காரில் வந்தவர்கள், 'அந்த காரில் நிறைய பேர் இருந்தனர். டேய் ஒதுங்கிப் போங்கடா' என்று கொலை வெறியுடன் கத்திக் கொண்டே வந்தனர். காரின் முகப்பில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது" என்றனர்.
காயம் அடைந்த ஊர்க்காவல் படை காவலர் தென்னரசன் நம்மிடம் கூறும்போது, ''அவர்களை பிடித்திருந்தால் சிறுமி திவ்யா இந்த விபத்தில் சிக்கி இருக்கமாட்டார். என் கண் முன்பாகவே சேகரன் சார் மீது காரைவிட்டு அந்த கும்பல் தூக்கியது. இது தற்செயலாக நடந்த விபத்துபோல தெரியவில்லை" என்றார்.
சென்னையில், காரை தறிகெட்டு ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் பறந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.