மஹாராஷ்டிராவில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வில் இடம்பெற்ற ஒரு கார்ட்டூனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய, அம்மாநிலத்தின் செல்வாக்கு பெற்ற மராத்தா சமூக மக்கள்,பத்திரிகை அலுவலகத்தை சூறையாடினர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. இம்மாநில மக்கள் தொகையில், மராத்தா சமூகத்தவர், 30 சதவீதம் உள்ளனர். ஒரு காலத்தில் நிலபுலன்களுடன் வசதி படைத்தவர்களாக வாழ்ந்து வந்த மராத்தா சமூகத்தவர், தற்போது விவசாயம் பொய்த்ததால், அரசு வேலை, கல்வியில் இடஒதுக்கீடு கோரி போராடிவருகின்றனர். மராத்தா சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண், ஜூலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்தார்.
இதை கண்டித்து, மராத்தா சமூகத்தவர், மாபெரும் பேரணி நடத்தினர். இந்த சம்பவத்தை கிண்டலடிக்கும் வகையில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'சாம்னா'வில், கார்ட்டூன் சித்திரம் இடம் பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மராத்தா சமூகத்தைச் சேர்ந்த, சாம்பாஜி படை என்ற அமைப்பினர், மும்பையில் உள்ள சாம்னா பத்திரிகை அலுவலகத்தை நேற்று முன்தினம் சூறையாடினர். சிவசேனா கட்சியில் உள்ள மராத்தா சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அந்த கட்சியிலிருந்து விலகப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
அவர்களை, சிவசேனா கட்சித் தலைமை சமாதானம் செய்து வருகிறது.இந்நிலையில், சர்ச்சைக்குரிய கார்ட்டூனை வரைந்த, ஸ்ரீனிவாஸ் பிரபு தேசாய், ''மராத்தா சமூகத்தவரை புண்படுத்தும் நோக்கில் கார்ட்டூன் வரையவில்லை. அந்த கார்ட்டூன் தவறான வகையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.