September 7, 2016
ஆதார் எண் விவகாரம்: அரசு நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ஆதார் எண்ணை கட்டாயப்படுத்திய அரசு நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பல்வேறு அரசு நிறுவனங்கள் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேத்யூ தாமஸ் என்பவர் சார்பில் இந்த வழக்கை, வழக்கறிஞர் ஐஸ்வர்யா பட் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.
பொது மக்களிடம் அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 5 உத்தரவுகள் பிறப்பித்துள்ளது பற்றி, மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இண்டியன் ஆயில் நிறுவனம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றில் ஆதார் எண் கோரப்படுவதாகவும், எனவே இதில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் ஐஸ்வர்யா பட், நியூஸ் 7 தமிழிடம் கூறுகையில், ஆதார் எண் பெறாத ஏழைகள், ரேஷன் போன்ற வசதிகளை பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்றார். இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் ஐஸ்வர்ய்யா பட் தெரிவித்தார்.
ஆதார் எண் விவகாரம்: அரசு நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.