Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 6, 2016

அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்


அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கூடங்குளம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்ப‌ட்டுள்ளது.

இதனை கேட்ட நீதிபதிகள், அரசை குறைகூறுவது அல்லது விமர்சிப்பதை தேசத் துரோகமாகவோ, ‌அவதூறாகவோ கருதமுடியாது என தெரிவித்தனர். உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே, தெளிவான உத்தரவை வழங்கியிருப்பதாக கூறிய நீதிபதிகள், மாநில அரசுகளுக்கு இந்த விவகாரத்தில் புதிய உத்தரவை ‌பிறப்பிக்க இயலாது என கூறிவிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.