Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 21, 2016

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமல்படுத்த முடியாதது: கர்நாடக முதல்வர் சித்தராமையா


காவிரியில் தமிழகத்திற்கு, வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, அமல்படுத்த முடியாத ஒன்று, என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டதை தொடர்ந்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க, கர்நாடக அமைச்சரவை இன்று கூடுவதாக கூறிய சித்தராமையா, இன்றே அனைத்துக்கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனையை பெற்ற பிறகே, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில், உணர்ச்சியை வெளிப்படுத்தாமல், கர்நாடக மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் சித்தராமய்யா கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, காவிரி நதி பாயும் மாவட்டங்களில் உள்ள மக்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர், எந்தவித தவறான வழிகாட்டுதலுக்கும் ஆட்படாமல், அமைதியை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மக்களின், விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் இருந்து தமது தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒருபோதும் பின்வாங்காது என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.