காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த 23ஆம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், "நடப்பு பாசன ஆண்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு தரவேண்டிய மீதமுள்ள 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு, இரு மாநிலங்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும். ‘வாழு, வாழ விடு’ என்ற அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும் கர்நாடகம் நல்லிணக்க அடிப்படையில் செயல்பட்டு, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க முயற்சிக்க வேண்டும். இது குறித்து மூத்த வழக்கறஞர் பாலி நாரிமன் கர்நாடகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும்" என்று அறிவுறுத்தினர்.
அப்போது, தமிழக அரசின் சார்பில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த பட்டியல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தங்களால் எந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விட முடியும் என்பது குறித்த பட்டியலை கர்நாடகம் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினமே நடைபெறும் அறிவித்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதனிடையே, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு 3 நாட்களில் அணுக வேண்டும் என்றும், தங்களது கோரிக்கையை தமிழகம் 3 நாட்களில் குழுவிடம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 3 நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும் என்றும், இரு மாநில நிலைமைகளையும் கேட்டறிந்து 4 நாட்களில் ஆய்வறிக்கையை காவிரி கண்காணிப்புக் குழு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விவசாயிகள் கருத்து
இது குறித்து விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், "கர்நாடகா அரசு 10 நாட்களுக்கு திறந்துவிடும் தண்ணீரால் சம்பாசாகுபடியை முழுமையாக செய்ய முடியாது. கர்நாடக திறந்துவிடும் தண்ணீர் யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றது. கர்நாடக திறக்கும் தண்ணீர் குடிநீருக்குதான் பயன்படும் என்றனர்.
தமிழக வாகனங்கள் நிறுத்தம்
இதனிடையே, கூடலூர் அருகே கர்நாடகா, தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அசம்பாவித்ததை தடுக்க கக்கநல்லாவில் கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. தண்ணீர் திறக்க மைசூரு, மாண்டியால் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.