Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 10, 2016

விமானங்களில் சாம்சங் போன்களுக்கு தடை


ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் விமானங்களில் செல்லும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 ரக மொபைல் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்சி நோட் 7 மாடல் மொபைல் போன்களின் பேட்டரி தீப்பிடித்து எரிவதாக புகார்கள் வந்ததை அடுத்து ஏராளமான மொபைல்களை சீனா திரும்பப் பெற்றது. இந்நிலையில் பேட்டரி தீப்பிடிக்கும் புகாரால் விமான பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை கொண்டு செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விமான பயணத்தின் போது பயன்படுத்தக் கூடாது எனவும் மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை இயக்குனர் பி.எஸ்.புல்லர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.