அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குப் போனார்.... அ.தி.மு.க-வில் இணைந்து விட்டார்.... காங்கிரஸ் தலைவர்கள் மீது கோபமாக இருக்கிறார்..என்று கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனைச் சுற்றித் தான் நிறைய செய்திகள். என்ன ஆச்சு என்கிற கேள்விகளோடு அவரைச் சந்தித்தோம்.
"நீங்கள் அ.தி.மு.க-வில் இணையப் போகிறீர்கள் என்று செய்தி வந்ததே ?"
"அதற்கு எந்த அவசியம் ஏற்படவில்லை. ஒரு முக்கியமான விஷயத்துக்காக அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றேன். ஆனால், அதையே செய்தியாக்கி வெளியிட்டு விட்டார்கள். ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து இருப்பவர் இன்னொரு கட்சியின் அலுவலகத்துக்குப் போகக்கூடாதா என்ன? அரசியல் நாகரீகம் வளர்ந்த தமிழகத்தில், இப்போது எல்லாம் அதை எதிர்பார்க்கவே முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது."
"நீங்கள் அ.தி.மு.க அலுவலகத்துக்குச் சென்றதற்கான காரணம் என்ன?"
"பாரதமாதாவுக்கு சிலைவைக்க வேண்டி கடந்த 48 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சிலை வைக்க அனுமதி கொடுத்திருக்கிறார் முதல்வர். அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டியது என் கடமை. அதோடு மதுரையில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட சொர்ணத்தம்மாள், காஞ்சிபுரத்தில் தீண்டாமைக்காவும், சுதந்திரத்துக்காகவும் பாடுபட்ட காந்தியின் சீடரான கிருஷ்ணசர்மா ஆகியோருக்கு இன்னமும் எந்த கெளரவமும் வழங்கப்படவில்லை. அவர்களின் சிலைகளை நிறுவி அவர்களுக்கு மரியாதை செலுத்தவும், எதிர்கால தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டியதும் நமது கடமை. அதை அரசுதான் செய்ய வேண்டும். இந்த இரு விஷயங்களுக்காகவும் முதல்வருக்கு மனு கொடுக்க விரும்பினேன். அதற்காகத்தான் அ.தி.மு.க அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். அங்கிருந்தவர்கள், 'நாங்களே உங்களைத் தொடர்பு கொள்கிறோம்' என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். இரு நாட்களுக்குப் பிறகு என் வீட்டுக்கு வந்த அதிகாரி ஒருவர் என்னைக் கூட்டிச்சென்று, முக்கியமான நபர் ஒருவரிடம் அந்த மனுவைக் கொடுக்கச் செய்தார். அவரும் அதைக் கண்டிப்பாகச் செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறார். இது தான் நடந்தது."
"காந்தி பேரவை என்கிற அமைப்பை நடத்தி வருகிறீர்கள். அதன் நோக்கம் என்ன ?"
"சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் அனைவருக்கும் தகுந்த மரியாதை செய்யவேண்டும். எதிர்காலச் சந்ததியினருக்கு அந்த வரலாறுகளை நாம் கடத்தவேண்டும். நதிகளை இணைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன். இதனால், நான் பி.ஜே.பி-யில் இணைந்துவிட்டேன் என்று சொல்ல முடியுமா? இது எல்லாம் பொதுநோக்கத்துக்காகச் செய்யப்படுவது. நோக்கம்தான் முக்கியமே தவிர. இதை வைத்து அரசியல் செய்வது என் எண்ணம் இல்லை. காந்தி, காமராஜரின் வழிவந்தவன் நான். காமராஜரின் கார் எண் கொண்ட இந்த வண்டி ஒரு நாளும் வேறு வழி தவறிப் போகாது."

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.